-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

3 நவ., 2025

ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு

www.pungudutivuswiss.com
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள்

நேற்றிரவு 8.00 மணியளவில் பெர்லின் விமான நிலையத்தில் ஒரு ட்ரோன் காணப்பட்டதாக ஒருவர் கூறியதைத் தொடர்ந்து சில ஓடுபாதைகள் மூடப்பட்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிசார் சிலர் ஒரு ட்ரோனைப் பார்த்துள்ளனர். 


ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு | Berlin Airport Halts Flights Due To Drone Sighting

அதைத் தொடர்ந்து ஹெலிகொப்டர் உதவியுடன் அந்த ட்ரோனைத் தேடும் முயற்சியில் பொலிசாரும் ஃபெடரல் விமான அலுவலகமும் இறங்கின.

சில விமானங்களின் புறப்பாடு நிறுத்தப்பட்டது. லண்டனிலிருந்து பெர்லின் வந்த ஒரு விமானம் உட்பட சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. 

ஜேர்மன் கடற்படையில் லேசர் ஆயுதம் அறிமுகம்

ஜேர்மன் கடற்படையில் லேசர் ஆயுதம் அறிமுகம்

சமீபத்தில், டென்மார்க், நோர்வே மற்றும் போலந்திலுள்ள விமான நிலையங்களிலும், ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையத்திலும் மர்ம ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

ad

ad