-

2 நவ., 2025

வடக்கு- கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தமிழரசுக்கட்சி தீவிரம்.

www.pungudutivuswiss.com.

வடக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளமையானது தமிழ் அரசியல் பரப்பில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கட்சி எடுக்கும் தீர்மானம் இறுதித்தீர்மானம் என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பிரித்தானிய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தமிழரசுக்கட்சி தீவிரம்

அதனை அடிப்படையாக கொண்டே சி.வி.கே. சிவஞானம் முன்னதாகவே ஆரூடம் கூறிவிட்டார் என்றே தோன்றுகின்றது.


வடக்கு மாகாணத்தில் மும்முனைப்போட்டி இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் நீதிபதி இளஞ்செழியனின் பெயரும் உச்சரிக்கபடுமிடத்து மீண்டும் ஒரு நீதிபதியை நம்ப தாயாரில்லை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படலாம்.

மேலும், அநுரவை எதிர்க்கின்றோம் என்று சுமந்திரனையே முதலமைச்சர் வேட்பாளராக்குவதற்கு திரைமறைவில் சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

வடக்கில் சுமந்திரன் கிழக்கில் சாணக்கியன் என்று தமிழரசுக்கட்சி முதலமைச்சர் வேட்பாளர்களை களமிறக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ad

ad