"மூன்று நாடுகளைக் காத்த மொழிப்பற்று " நம்மிடம் பொய்த்து ஏன் ? நாம் பயணித்த வரலாற்றுத் தடங்களில் தடங்கல் என்ன ? என்ற சிந்தனையில் உருவாகிய காணொளி
-
31 டிச., 2012
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.
நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி!
சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது.
30 டிச., 2012
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,
பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள் போட்டி: டோணி அபார சதம்! இந்தியா-227/ 6(வி)!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 4 பேர் 20 ரன்களுக்குள் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ரெய்னா, டோணி, அஸ்வின்
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)