இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள், முழக்கங்கள், உண்ணாவிரத அறப்போராட்டம் மூலமும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர்.
குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?
நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.
கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.
தஞ்சையில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி ......
ஏன் படைத்தான் எமை?
கண் படைத்தா னேன் அழுவதற்கா கால் படைத்தா னதைத் தொழுவதற்கா
புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
இன்று போராட்டம் முடிந்து கலைந்த மாணவர்கள், செல்லும் வழியில் KFC கடையை நுங்கம் பாக்கத்தில் பார்த்து உள்ளே சென்று கடையை மூடச் சொல்லி முற்றுகையிட்டுள்ளனர். மணவர்களுக்கு எதிரியை அடையாளம் காட்டினால் போதும். காலையில் ப.சிதம்பரம் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து புலிக்கொடியை வைத்துவிட்டு வந்ததாகட்டும் KFC முற்றுகையாகட்டும் கலக்கி கொண்டுள்ளனர்.
புதிய தலைமுறையிலும் பிறகு கலைஞர் செய்திகளிலும் தொடர் நேரலையில் மனுஷ்ய புத்திரன் பேசிய சில அடிப்படைக் கருத்துக்கள்.. 1. அமெரிக்க தீர்மானத்தை கிழித்தெறிந்துவிட்டுத்தான் அதைப்பற்றி இங்கே விவாதிக்க முடியும்.
2. இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த வேண்டும். 3. கடைசிவரை மொளனமாக இருந்து, வாய் மொழி திருத்தம் என்றெல்லாம் பொய் சொல்லி இந்தியா மிக அருவருப்பான கபட நாடகத்தை ஆடியது
தூத்துக்குடி மாணவர்கள் 22.03.2013 நாளை போராட்டம் அறிவிப்பு மத்திய வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் , ( தமிழ் ஈழ விடுதலைகாண மாணவர் கூட்டமைப்பு ) தூத்துக்குடி மாவட்டம்
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு..
இனி இந்தியாவுக்கு தமிழகத்தில்,தமிழகம் நமது நாடு,நமது தேசம் என்று உணர்கிற எவரும் வரிகட்ட தேவையில்லை.கட்டவேண்டாம்.இந்தியாவுக்கு சொந்தமான,இந்தியாவினை நினைவூட்டக்கூடிய இந்தியர்களின் சிலைகள்,சாதியை நினைவூட்டகூடியவர்களின் சிலைகள்,மதவாதத்தை நினைவூட்டக்கூடியவர்களின் சிலைகள் என்பன,குறிப்பாக,ராஜீவ்,காந்தி,போன்றோரின் சிலைகளை தமிழ்நாடெங்கிலும் அடித்துடைக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களை முற்றுகையிட்டு தொழில் நிகழாவண்ணம் முடக்கவேண்டும்.நாங்களே எத்தனை நாளுக்குத்தான் சாபிடாமல்,தொண்டை தண்ணீர் வற்ற கத்துவது?அரசு திரும்பி பார்த்து,தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.உலக நாடுகள் அங்கீகரித்து,பொதுவாக்கேடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிற வரை நமது போராட்டத்தில் வேகம் அதிகரித்துக்கொண்டே போகவேண்டும்.
மாணவர்களுக்கு நிகராக,இல்லை,அதற்கும் மேலாக நேற்றைய போராட்டங்களில் மாணவிகளின்,எங்கள் பெண் புலிகளின் ஆதிக்கம் அதிகமாய் இருந்ததை பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்.
வைகோவின் தாயார் தன் 91 வயதில் ஈழ விடியலுக்காக தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கிறார்....
போராளிகளுக்கு உணவு பரிமாறிய அந்த அற்புத தாய்..தற்போது போராட்ட பந்தலில்....
புரட்சி பரவட்டும்....விடியல் கிடைக்கட்டும் !!!
இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
தமிழக அகதி முகாமில் குழந்தையுடன் பங்கேற்ற ஈழத் தாயின் நெஞ்சை உருக வைக்கும் போராட்டம்!
இனவாத அரசுக்கு எதிராக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் முகாமில் 202 குடும்பங்களை சேர்ந்த 872 பேர் (ஒரு வயது குழந்தை முதல் 73 வயது முதியவர்கள் வரை) பட்டினி
விமானம் மீது மின்னல் தாக்குதல்: உயிர் தப்பிய கால்பந்து வீரர்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இன்றிரவு இத்தாலி-பிரேசில் நாட்டு அணிகளுக்கு இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஜெனீவா விமான நிலையத்தில் இன்று காலை இத்தாலி வீரர்கள் வந்த விமானம் தரையிறங்கும்போது, கடுமையான மின்னல் தாக்கியது. இதைக் கண்டு சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் இத்தாலி வீரர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள்.
விமானத்துக்கும் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்த மின்னல் தாக்கியபோது அந்த விமானம் குலுங்கியதை பயணிகள் உணர்ந்தனர் என்றும் விமானநிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
21 மார்., 2013
17 வயது இளம் விலைமகளுடன் உறவுகொண்ட சுவிஸ் வங்கி அதிகாரி!
சிங்கப்பூரில் நடந்த பாலியல் குற்றத்திற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஜீவர் பூவர்கின்(Juerg Buergin) மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வருகின்ற செவ்வாய் கிழமையன்று விசாரணை தொடங்கவுள்ளது.
வேலைசெய்த இடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீசார் விசாரணை செய்து பின் கைது செய்ததாகவும் இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
அமெரிக்காவின் முன்னைய தீர்மான வரைபிலிருந்து இந்தியா "உருவிய" வசனங்கள்.
01. "வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும்." எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
02. "வெளியக விசாரணை" என்பது "உள்ளக விசாரணை" என மாற்றப்பட்டிருக்கிறது. 03. "பொருத்தமான சர்வதேச விசாரணை " எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
04. இலங்கை அரசை "வலியுறுத்துகிறோம்" எனும் சொல் "ஊக்கப்படுத்துகிறோம்" என மாற்றப்பட்டிருக்கிறது.
05. "தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம்" எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
South Africa 234/9 (50 ov)
Pakistan 236/7 (48.4 ov)
Pakistan won by 3 wickets (with 8 balls remaining)