| மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது! [Monday 2026-07-20 19:00] |
![]() இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது |
-
21 ஜூலை, 2026
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 8 என்புக்கூடுகள் அடையாளம்! [Monday 2026-07-20 19:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. இதன்போது, புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது |
19 ஜூலை, 2026
| போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா! [Saturday 2026-07-18 07:00] |
![]() போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர். |
18 ஜூலை, 2026
| சுமந்திரன் பிரதம விருந்தினரா? - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். |
| செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்! [Saturday 2026-07-18 20:00] |
![]() யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சங்கு கூட்டணி- தமிழரசு தலைவர்கள் சந்திப்பு! [Saturday 2026-07-18 20:00] |
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
| TGTE Condemns Deployment of Sri Lankan Security Forces to Haiti Calls on the United Nations to Apply Its Human Rights Due Diligence Policy [Friday 2026-07-17 16:00] |
![]() The Transnational Government of Tamil Eelam (TGTE) today expressed its profound concern and unequivocal opposition to the deployment of 1,132 Sri Lankan military and police personnel to Haiti as part of the United Nations-authorized Multinational Security Support (MSS) mission. |
| பிரதி அமைச்சர், ஆளும்கட்சி எம்.பிக்கு பிடியாணை! [Friday 2026-07-17 16:00] |
![]() நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார் |
17 ஜூலை, 2026
| சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப்: உலகை அதிர வைத்த ஈரான்! [Friday 2026-07-17 16:00] |
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. |
| “தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்” - விஜய்க்கு எதிராக வெடித்த சீமான்! [Friday 2026-07-17 07:00] |
![]() இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் |
| சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை! [Friday 2026-07-17 07:00] |
![]() கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. |
| சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டது பாரிய அச்சுறுத்தல்! [Friday 2026-07-17 07:00] |
![]() அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார். |
15 ஜூலை, 2026
| 21வது நாளாகத் தொடர்ந்த போராட்டம்! [Wednesday 2026-07-15 06:00] |
![]() முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. |














