புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2019

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.
தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
இதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.

அதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ad

ad