புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2022

உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. தோகா, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக 26-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியின் கடைசி கட்டத்தில் 44-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரில் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரெமோ புருலெர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ad

ad