-

30 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
வடமராட்சிக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஏ9 வீதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி. Top News
[Thursday 2026-07-30 18:00]

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்து இன்று அதிகாலை ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் வல்வெட்டித்துறையை சேர்ந்த குமாரசிங்கம் சுகிர்தன், ஜெயராசன் மனோகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

   Bookmark and Share Seithy.com

  • Welcome

ad

ad