-
13 செப்., 2013
ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ஆளுநர் சந்திரசிறி கலந்து கொண்டது பிரச்சினைக்குரியது: கெஹெலிய
வடக்கில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் தேர்தல் கூட்டங்களில் மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கலந்து கொண்டமை பிரச்சினைக்குரியது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அகவை ஐம்பது காணும் அண்ணலே வாழ்க
13.09.2013
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியதி மதிய குழு உறுப்பினரும் தாயாக விடுதிக்கு பெரும் பங்கற்றியவருமான குகரசன் அவர்கள் இன்று தனது ஐம்பதாவது அகவையினுள் காலடி வைக்கிறார் இவரை இன்னும் இன்னும் இனிதே நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம்
13.09.2013
விஸ்வலிங்கம் குகராசன்
சுவிட்சர்லாந்து
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியதி மதிய குழு உறுப்பினரும் தாயாக விடுதிக்கு பெரும் பங்கற்றியவருமான குகரசன் அவர்கள் இன்று தனது ஐம்பதாவது அகவையினுள் காலடி வைக்கிறார் இவரை இன்னும் இன்னும் இனிதே நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம்
வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது.
பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது! - சீ.வி.விக்கினேஸ்வரன்
தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் உட்பட 200 பேர் கைது
இலங்கையில் நடக்க உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்டம்பர் 12ம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் போராட்டம்!- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.
12 செப்., 2013
லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று
போரின் போது ஐ.நா இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கை ஆராயப்படுகிறது!- பர்ஹான் ஹக்
இலங்கையில் போர் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு எப்படி செயற்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் இணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்! ஜெனீவாவில் இந்தியா தெரிவிப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூட்டத் தொடரில்
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து இந்திய உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஈ.பி.டி.பி தேர்தல் பிரச்சாரம்
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிற்காக கொழும்பில் பாடசாலைகளிற்கு விடுமுறை
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதற்காக தலைநகர் கொழும்பில்
யாழில் முதவாவது மின் தகன மயானம்
யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது.
""ஹலோ தலைவரே...… … ராகுல்காந்தியும் கனிமொழியும் சந்தித்தது பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''
""படிச்சேம்ப்பா.. தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க கூட்டணிக்கான முயற்சிகளையும் அதற்காக ஆ.ராசாவை கழற்றிவிடப் போவதா டெல்லி வட்டாரத்தில் ஒலிக்கும் பேச்சுகளையும் விரிவா எழுதியிருந்ததே நம்ம நக்கீரன். கலைஞர்கூட இது சம்பந்தமா பேட்டி கொடுத்திருந்தாரே..
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2013-2015 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் பலத்த பரபரப்புடன் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. "கலைப்புலி' எஸ்.தாணு அணியை தோற் கடித்து அசுர பலத்துடன் ஜெயித்திருக் கிறது கேயார் அணி.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இம்புட்டு பரபரப்பு ஏற்பட ஏகப்பட்ட "அரசியல்' காரணங்கள் இருந்ததுதான்
இலங்கையில் இயங்கும் லங்காசிறி, தமிழ்வின் இணையத்தள சேவர்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றன
பொதுவாக சிங்கப்பூரில் இருந்து இலங்கை செல்லும் செர்வர்கள் மீது அதிக தாக்குதல்கள் நடைபெறுகின்றன
தேர்தல் வேட்பாளர்களின் கருத்துக்கள் அடங்கிய பிரச்சாரங்கள் லங்காசிறி தமிழ்வின் ஊடகங்களில் அதிகமாக வெளிவரும் இந்நிலையில் இவ்வாறாக இலங்கையில் இணையத்தள சேர்வர்கள் மீதான தாக்குதல் நடாத்துவது தேர்தல் பிரச்சாரங்களை முடக்குவது போன்ற செயல்கள் தான்
இரவல் சின்னத்தில் போட்டியிடுவோரால் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்: வேட்பாளர் ப. அரியரத்தினம் கேள்வி - தேனிசைச் செல்லப்பா பாடல் 2
11 செப்., 2013
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம் பமாகியுள்ள நிலையில் ஐ.நா. முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ம் திகதி வரையும், அதன் பின்னர் 23ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரையிலும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?
தேர்தலில் இராணுவத் தலையீடு; ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்!
வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணிகள் எவையும் அரசினால் சுவீகரிக்கப்படவில்லை ; அடித்துக் கூறுகிறார் பசில்
அரசாங்கத்திற்கு தேவையானவற்றைத் தவிர மேலதிகமாக ஒரு அங்குல நிலமும் இதுவரை சுவீகரிக்கப்படவில்லை. எனினும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிமையாளர்களுக்கு வழங்கியே நாம் அவற்றை பயன்படுத்தி வருகின்றோம்
ஐ.நாவில் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரிசைகட்டிய அனைத்துலக மனித உரிமை அமைப்புகள்
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில், நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன.
அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது.
2014 உலக கிண்ண போட்டிக்கு ஐரோப்பிய வலயத்தில் இருந்துகுழு பீ இல் இத்தாலியும் குழு டி இல் ஹோலந்தும் முதலாம் இடத்தை இனி எந்த நாடும் முந்த முடியாத புள்ளிகளை பெற்று முன்கூட்டியே இன்று தகுதி பெற்றுள்ளன .
குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது .
குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது .
கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வெளியிடப்படது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் நேற்று மாலை 4மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.
10 செப்., 2013
இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி.
கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார்.
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடா?: திருச்சியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
“இனப்படுகொலை இலங்கையே”, “இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்தா” என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதிகேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.
திரு இரத்தினசிங்கம் செந்தில்குமரன் |
பிறப்பு : 13 பெப்ரவரி 1978 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2013 |
|
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. வீடியோ
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும்எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
சோமாலியாவில் சிக்கி உள்ள ஈழதமிழர்களின் நிலை
தயவு செய்து பகிரவும் , அவசரம்:
சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழ தமிழர்கள்..,
கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் புக கப்பல் மூலம் சென்று காணமல் போன சிலர் சோமாலியாவில் தற்போது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்பொழுது அவர்களுடைய உறவினர்களுக்கு சோமாலியா நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகள் வருவதாகவும், எதிர் முனையில் எதையும் கேட்க இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
அழைப்புகள் வந்த எண்கள்
0021-2692298064
0021-2621297906
0021-2698010610
0021-2522132284
அவர்கள் குறித்த தகவல்களை பெற சோமாலிய நாட்டு தொடர்புடைய நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.
தயவுசெய்து சோமாலியாவில் நண்பர்கள் உள்ள அல்லது வணிக தொடர்புள்ள யாரேனும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.
சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழ தமிழர்கள்..,
கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் புக கப்பல் மூலம் சென்று காணமல் போன சிலர் சோமாலியாவில் தற்போது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்பொழுது அவர்களுடைய உறவினர்களுக்கு சோமாலியா நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகள் வருவதாகவும், எதிர் முனையில் எதையும் கேட்க இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
அழைப்புகள் வந்த எண்கள்
0021-2692298064
0021-2621297906
0021-2698010610
0021-2522132284
அவர்கள் குறித்த தகவல்களை பெற சோமாலிய நாட்டு தொடர்புடைய நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.
தயவுசெய்து சோமாலியாவில் நண்பர்கள் உள்ள அல்லது வணிக தொடர்புள்ள யாரேனும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.
ரஞ்சனியை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை! ஏசியோவின் குற்ற அறிக்கை புறந்தள்ளப்படலாம்
அவுஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ரஞ்சனி உட்பட் 47 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வட மாகாணத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
9 செப்., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)