நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
-
27 மே, 2020
புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்ற 2004 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை
---------------------------------------------------------------------------------
1.இரா , சம்பந்தன்
2.மாவை சேனாதிராசா
3. செல்வம் அடைக்கலநாதன்
4.கஜேந்திரகுமார் ஜீ பொன்னம்பலம்
5.சுரேஷ் பிரேமசந்திரன்
6.என் .ரவிராஜ்
7.எம்.கே .சிவாஜிலிங்கம்
8.சிவசக்தி ஆனந்தன்
9.கே .துரைராஜசிங்கம்
10.எஸ் .கஜேந்திரன்
11.பதமினி சிதம்பரநாதன்
12.கே.சிவநேசன்
13.எஸ்.கனகரத்தினம்
14.எஸ்.கிஷோர்
15.எஸ்.நோகதரலிங்கம்
16.ரி .கனகசபை
17.எஸ்.தங்கேஸ்வரி
18.கே .இராசநாயகம்
19. எஸ்.ஜெயானந்தமூர்த்தி
26 மே, 2020
ஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்?
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்
25 மே, 2020
முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி;இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு
மருத்துவமனை நிர்வாகம்துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புற்றுநோயென அறிகுறி கண்ட 3 வாரங்களிலேயே சுவிஸில் இளம் குடும்பப்பெண் பலியான பரிதாபம்
புற்று நோய் அறிகுறி கண்ட 37 வயது தமிழ் குடும்பப்பெண் ஒருவர் குடும்பவைத்தியரிடம் சென்று பரிசோதனைக்குட்படுத்திய மூன்று வாரங்களிலேயே அவசர சத்திர சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை மரணமான அதிர்ச்சியை சம்பவம் சுவிசில் நடந்துள்ளது . குடும்ப வைத்தியர் சரியான முறையில் பரிசோதனையை நடத்தி நோய் அறிகுறியை முன்கூட்டியே கண்டு பிடிக்கவில்லையா அல்லது சரியான முறையில் அவசர சிகிச்சையை அளிக்கவில்லையா என்பது கேள்விக்குறி
24 மே, 2020
மரணஅறிவித்தல்/ கண்ணீர் அஞ்சலி
திருமதி சின்னரமணன் (புங்குடுதீவு .9) லோஜினா
24.05.2020
சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலம் சுமிஸ்வால்ட் நகரில் வசித்து வந்த புங்குடுதீவு 9 ஐ சேர்ந்த சின்னரமணனின் துணைவியார் லோஜினா இன்று மாலை இயறகை மரணமெய்தினார் என்ற செய்தியை கவலையுடன் தெரி வித்துக்கொள்கிறோம் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
23 மே, 2020
புங்குடுதீவில் கள்ளமாடு வெட்டிய மூவரை கைது செய்த போலீஸ் .தப்பியோடிய மூவர் பிரதேசசபை அலுவலர்கள் ஆவர் 21.05.2020 வியாழன் அன்று அதிகாலையில் புங்குடுதீவு 4ம் வட்டாரப்
பகுதியில் 6 நபர் கொண்ட கும்பல் ஒன்று பசு மாட்டை திருடி இறைச்சியாக்கும் போது அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அதனைக் கண்டு உடனடியாக ஊர்காவற்றுறை, புங்குடுதீவு பொலிஸ் பிரிவினருக்கு வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி S.I திரு விவேகானந்தன் தலமையில் பொலிஸ் குழுவினருடன் புங்குடுதீவு பொலிஸ் பிரிவினரும் இணைந்து அப்பகுதி பொது அமைப்புக்கள் உதவியுடன் குறித்த இடத்தில் வைத்து இறைச்சியுடன் 3நபர்களை கைது செய்தனர் அத்துடன் இறந்த மாட்டின் உடல்பாகங்களும் கைப்பற்றினர். ஏனைய 3 நபர்களும் தப்பிஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களில் இருவர் வேலணை பிரதேச சபை புங்குடுதீவு உபஅலுவலகத்தில் பணி புரியும் அரச அலுவலர்கள் ஆவர். இவர்கள் நீண்ட காலமாக மாடுகளை திருடிஇறைச்சியாக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர் ஏனைய 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும். அத்துடன் அரச ஊழியரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேலணை பிரதேச சபையினரிடம் கேட்கின்றனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

21 மே, 2020
www.pungudutivuswiss.comபிரான்ஸ்: மோன்ட் செயிண்ட்-மைக்கேல் மற்றும் லூர்து யாத்திரை தளம் போன்ற இடங்கள் பார்வையாளர்களுக்கு வார இறுதி முதல் திறந்திருக்கும். இயக்கத்தின் மீதான தடைகள் மே 11 ஆம் தேதிக்கு முன்பே தளர்த்தப்பட்டன. கடைகளை மீண்டும் திறக்க முடிந்தது, ஆனால் உணவகங்களும் பார்களும் மூடப்பட்டுள்ளன. சில கடற்கரைகள் திறந்திருக்கும், ஆனால் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு மட்டுமே, சூரிய ஒளியில் அல்ல. சுவிட்சர்லாந்திற்கு ஒரு எல்லை திறப்பு ஜூன் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: கிட்டத்தட்ட 180,000
பதிவான இறப்புகள்: 28,084
www.pungudutivuswiss.comஜெர்மனி: அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, பல குழந்தைகள் தினசரி அடிப்படையில் பள்ளிக்குச் செல்கிறார்கள். தினப்பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை மீண்டும் திறக்குமாறு ஜெர்மன் குழந்தைகள் நிதியம் மத்திய அரசு, மத்திய மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. "முந்தைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், ஏராளமான குழந்தைகள் இன்னும் தினப்பராமரிப்புக்கு செல்லமுடியவில்லை, மிகக் குறைந்த அளவிற்கு மட்டுமே இருக்கிறார்கள்" என்று ஜெர்மன் குழந்தைகள் நிதியத்தின் தலைவர் தாமஸ் க்ரூகர் கூறுகிறார். இது "அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் உளவியல்-சமூக வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான குறுக்கீடு" ஆகும். பொருத்தமான பாதுகாப்புத் தேவைகளின் கீழ் பகல்நேர பராமரிப்பு மையங்களையும் பள்ளிகளையும் திறப்பது இப்போது "தர்க்கரீதியான அடுத்த கட்டம்" ஆகும்.
பவேரியாவில் பீர் தோட்டங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதி வரை நாடு முழுவதும் முக்கிய நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அண்டை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான எல்லைகளில், சீரற்ற சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன; சுவிட்சர்லாந்தின் எல்லை ஜூன் 15 அன்று முழுமையாக திறக்கப்பட உள்ளது. பிற நடவடிக்கைகளை எளிதாக்குவது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும்.
உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: 178,000 க்கும் அதிகமானவை
பதிவான இறப்புகள்: 8172
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)