-

20 மே, 2026

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! [Wednesday 2026-05-20 17:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (20) காலை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்தப் பிரச்சினை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி விடயங்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8,625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது.

கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5 மார்., 2026

ஈரான் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இத்தாலி கூறுகிறது

www.pungudutivuswiss.com

சமீபத்திய மத்திய கிழக்கு நெருக்கடியைத் தூண்டிய ஈரான் மீதான அமெரிக்க-

ஈரானிய கப்பல் இலங்கை கடல் எல்லையில் இல்லை! [Thursday 2026-03-05 16:00]

www.pungudutivuswiss.com

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ரியாத், டுபாய்க்கான ஸ்ரீலங்கள் விமானங்கள் இன்றும் ரத்து! [Thursday 2026-03-05 16:00]

www.pungudutivuswiss.com

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு.. காங்கிரஸுக்கு 28+1 ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து

www.pungudutivuswiss.com

இஸ்ரேலின் 900 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ஹமாஸ்! அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் பதற்றம்

www.pungudutivuswiss.com
நாளுக்கு நாள் மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரித்து வருகின்றது.

ஈரானுக்கு உள்ளே குர்திஷ் படை ஈரான் ராணுவத்தை தாக்க ஆரம்பித்துள்ளது- அமெரிக்கா இஸ்ரேல் ஆதரவு

www.pungudutivuswiss.com

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் 47

இந்திய-இலங்கை அருகே 3 நாட்களாக பதுங்கி இருந்த அமெரிக்க சப்மெரீன்: இந்தியாவுக்கே தெரியாதாம் !

www.pungudutivuswiss.com

இலங்கை காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில்,

ஈரான் இராணுவத் தலைமையகம் மீது 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்

www.pungudutivuswiss.com

கட்டுநாயக்கவில் இருந்து டுபாய்க்கு 4 விமானங்கள்! [Thursday 2026-03-05 05:00]

www.pungudutivuswiss.com

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை  04 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புதன்கிழமை 04 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்கா மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பல்- 80 சடலங்கள் மீட்பு! [Thursday 2026-03-05 05:00]

www.pungudutivuswiss.com

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து  80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குர்திஸ் போராளிகளை ஈரானுக்குள் களமிறக்கிறதா அமெரிக்கா?

www.pungudutiv

ஈரானுக்கு எதிரான போர் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்

17 பிப்., 2026

பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்! [Monday 2026-02-16 18:00]

www.pungudutivuswiss.com

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

12 பிப்., 2026

12 பேருக்கு மரணதண்டனை விதித்தது கம்பஹா மேல்நீதிமன்றம்! [Wednesday 2026-02-11 17:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலரை தாக்கி கொலை செய்த வழக்கில் கம்பஹா மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சுவிஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் வடக்கிற்குப் பயணம்! [Wednesday 2026-02-11 17:00]

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ' (Foundation for a World Without Mines – FWWM)  பிரதிநிதிகள் குழு, அண்மையில்  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட 'கண்ணிவெடிகளற்ற உலகிற்கான அறக்கட்டளை ' (Foundation for a World Without Mines – FWWM) பிரதிநிதிகள் குழு, அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

11 பிப்., 2026

மாம்பழம் யாருக்கு? - பாமக வழக்கில் எதிர்பாராத திருப்பம்! [Monday 2026-02-09 07:00]

www.pungudutivuswiss.com

பாமகவில் தந்தை- மகன் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. ராமதாஸ் தரப்பு மாம்பழச் சின்னம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், திடீர் திருப்பம் நடந்துள்ளது. பாமக கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமை இல்லை என ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் களம் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் பாமகவில் இன்னுமே உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது.

சிம் அட்டை உரிமையாளர்களை மீள்பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி! [Tuesday 2026-02-10 19:00]

www.pungudutivuswiss.com

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ad

ad