-

18 ஆக., 2026

www.pungudutivuswiss.com
மேலும் 10 எலும்புக்கூடுகள்!
செம்மணி மனிதப் புதைகுழி: 108ஆவது நாள் அகழ்வில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகளில் இதுவரை 572 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படடுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆவது நாளான இன்று (17) திங்கட்கிழமை, மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 9 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 572 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகழ்வுப் பணிகளின்போது குவியலாகக் காணப்பட்ட எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மேலும் 3 சோதனைக்குழிகள் அகழப்பட்ட போதிலும், அவற்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

இதுவரை புதைகுழியை அண்மித்த பகுதிகளில் 14 சோதனைக்குழிகள் அகழப்பட்டுள்ளன. அவற்றில் 5 சோதனைக்குழிகளில் இருந்து 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

;.

ad

ad