-

18 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது!
[Monday 2026-08-17 17:00]

ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கடைக்கு அவர் சென்​றார். வெளியே வந்​த​போது வாசலில் இருந்த குப்​பைத் தொட்டி வெடித்​துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார். இதுதொடர்​பாக சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்​தனர்.

அப்​போது ரஷ்​யா​வின் சோச்சி பகுதி​யைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி மார்​கரிட்டா ராய்ட் (32), ஒரு காரில் இருந்து ரிமோட் கன்ட்​ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்​கச் செய்​திருப்​பது தெரிய​வந்தது.

கைதான பாலியல் தொழிலாளி உக்​ரைன் ராணுவத்​தின் உளவாளி​யாக செயல்பட்​டிருப்​பது போலீஸ் வி​சா​ரணை​யில் உறு​தி செய்யப்பட்டு உள்​ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2014-ம் ஆண்​டில் உக்​ரைன் கடற்​படை நீர்​மூழ்கிக் கப்​பலின் கேப்​ட​னாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாள​ராக மாறி​ய பின்னர் ரஷ்ய கடற்​படை​யின் மூத்த தளபதி​யாக நியமிக்​கப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad