-

18 ஆக., 2026

www.pungudutivuswiss.com
போதைப்பொருள் விவகாரம்: சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக!
[Monday 2026-08-17 17:00]

போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.  இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.

போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார். 10 பேர் சண்டை போட்டு பத்து பேர் மோதினால் அது கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதனால் இது படுகொலை.

மாணவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர். போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், போதைப் பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற காவல் துறையினர் குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்து உள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

போதைப் பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள் இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்து போய்விட முடியாது.

அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் இந்த கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம்.

சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக் கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர்" என பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "மாணவர்கள் குழுக்களுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக அமுதன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, பழிவாங்கலே காரணம்.

போதைப்பொருள் குறித்து புகாரளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்ததால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. இதுவரை அமுதன் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், திமுக ஆட்சியில் டெல்லியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்களுக்கு இருந்த தொடர்பு அனைவரும் அறிந்தது" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட நபரை, எங்கள் தலைவர் உடனடியாக கைது செய்ததோடு, கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டார்.

ஆனால் தவெக ஆட்சியில் ஒரு அமைச்சரே IPL விளையாட்டின்போது பவுடர் நுணுக்கிவிட்டு, மாத்திரையை நுணுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? தவெக ஏதும் நடவடிக்கை எடுத்துருக்கிறதா" என கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், "அந்த வீடியோ தவறான புரிதலோடு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்கனவே நான் தெளிவாக விளக்கிவிட்டேன். அதில் அவர்களுக்கு முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான்.

அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்" என பதிலளித்தார்.

இதனையடுத்து தங்கள் கேள்விக்கு அரசு தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை என தெரிவித்த திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பு செய்த பின்னர் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "கோவையில் மாணவர் அமுதன், திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் ஆகியோரை போதைப் பொருள் கும்பல் அடித்துப் படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேள்வி எழுப்பினோம்.

ஆனால், அதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்காமல், எதிர்க்கட்சிகளின் மேல் பழி போடும் வழக்கத்தையே தவெக அரசு செய்து வருகிறது.

கடந்த 3 மாதங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தவெக அரசில் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை. அந்தத்துறை குறித்த கேள்விக்கு, துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை.

ad

ad