புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2023

வடமராட்சியில் டிப்பருடன் மோதி 14 வயது சிறுவன் பலி! - இளைஞன் படுகாயம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

இச்சம்பவம் நேற்று மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றவத்தை பகுதியில் வசிக்கும் அஜந்தன் (வயது 21) என்பவர் கை மற்றும் கால் முறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிளும் டிப்பர் பவருக்குள் சிக்குண்டு தீ பிடித்தும் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad