-

18 செப்., 2026

www.pungudutivuswiss.com
கொடிகாமம் பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலி!
[Friday 2026-09-18 07:00]


கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்

கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad