-
18 பிப்., 2013
லசந்தவை பொன்சேகாவே கொலை செய்தார்! மஹிந்த கூறியதாக ஊடகவியலாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவிப்பு
இலங்கையின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளதாக இலங்கையின் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலை கல்விச் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெற ஒத்துழைப்பு; மாணவ பிரதிநிதிகள் உறுதிமொழி |
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
|
எமது செய்தியில் குறிப்பிடிருந்த மர்மமான முறையில் இறந்து போன புளியங்கூடல் பெண்ணின் மரண அறிவித்தல் இது தான் .இவரது சுவிஸ் வாழ் கணவனின் அயோக்கியத்தனத்தால் அநியாயமாக இறந்தவர்
| |||||||||||||||||||||||||||||||
|
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 பிப்., 2013
ஜெனீவா கூட்டத் தொடர்! இலங்கைக்குழு அடுத்த வாரம் பயணம்! நவி.பிள்ளையின் அறிக்கை மார்ச் 20ல் பரிசீலனை
www.nofirezone.org
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.
16 பிப்., 2013
இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இராணுவச் செயற்பாடுகளுக்கு அப்பால் இரகசியமாக ஆயுதக்குழுவை நடத்தி வருவதாகச் சந்தேகிக்கின்றேன் என பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
வலி.வடக்கு மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் சிங்கள மக்கள் உள்ளிட்ட முழு இலங்கையருக்கும் அபகீர்த்தியை
முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர்
இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர்
கணவன் மனைவிக்கு இடையில் நடைபெற்ற சண்டை அவர்களுடைய பிள்ளைகள் இருவரின் உயிரைக் குடித்த பயங்கர சம்பவம் ஒன்று யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
யாழ்.புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் சண்டை நடப்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. அதே போன்று நேற்று இரவு இருவருக்கும் இடையில் ஆரம்பமாகிய சண்டை இன்று அதிகலைவரை நீடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது ஒன்றரை வயது மற்றும் 6 மாதக் குழந்தையையும் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சித்துள்ளார்.
இதன் போது குறித்த இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளது. எனினும் தண்ணீரில் தத்தளித்த அக் குழந்தைகளின் தாய் மனம் மாறி அங்கிருந்து கற்பாறை ஒன்றினை பிடித்து உயிர் தப்பியுள்ளார்.
இரு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமான குழந்தைகளின் தந்தையும் தாயும் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் தோழியாக தமிழினி
வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
விக்கிபீடியா என்ற மாபெரும் தேடல் தளத்தில் என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைய இங்கே தருகின்றோம்
நன்றி விக்கிபீடியாhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D#.E0.AE.87.E0.AE.AF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.A9.E0.AE.B0.E0.AF.8D
மாறுதடம் திரைப்படத்தின் இயக்குனர் சக.ரமணன் பற்றி சில வரிகள்
ஈழத்தின் மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமானிய மகா
வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார் .மிக இளம் வயதில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த இவர் மேலதிக கல்வியை சுவிசில் பெற்ற பின்னர் இசையில் நாட்டம் கொண்டு வயலின் இசைக்கருவியை முறைப்படி கற்று தேறினார் .பின்னர் கலைத்துறைக்குள் புகுந்து பல சாதனைகளை புரட்டி போட்டார் .நாடக கலையை அறிந்து தெரிந்து கொள்ள அவா கொண்டு புறப்பட்டவர் இன்று சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கணும் சிறந்த நாடக வாதி என்ற முத்திரையை பதித்துள்ளார் .பழைய தமிழ் நாடக முறைமைகளை மாற்றி புரட்சி செய்தார்.மேற்கத்தைய நவீன நாடகவியலை முறைப்படி கற்க ஆரம்பித்தார்,காட்சிப்படுத்தல் ,ஒப்பனை மேம்படுத்தல் ,மேடை அலங்காரம் ,எளிமையான வழிமுறைகள் ,பின்னணி இசைப்படுத்தல் .நவீன ஒளி அசைவு தோற்றுவாய் ,என் அத்தனை புதுமைகளையும் புகுத்தி தமிழ் நாடக உலகை மேம்படுத்தினார்.இவற்றுக்கு துணையாக நடக்க காவலர் தாசியஸ் அன்டன் பொன்ராஜ் பாஸ்கரன் போன்றோரை ஒருங்கிணைத்து நாடகப் பாசறைகளை ஏற்படுத்தினார் அங்கே பல புதிய நடிகர்களை உள்வாங்கி பயிற்சி பட்டறைகளில் மெருகேற்றினார்.அத்தோடு நாட்டு கூத்து.ஓரங்க நாடகம் ,இசைவழி நாடகம் தெருவழி நாடகம் என பலவகை கலைப்படைப்புகளை பிரசவித்தார்.ஜெனீவ ஐ நா சபை முன்றல்பேரணிகள் போன்ற தாயக நிகழ்வுகளை தனது தமிழுணர்வு மிக்க படைப்புக்களால் காலத்துக்கேற்ற கலை வெளிப்பாடுகளினால் எழுச்சிப் படுத்தினார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட காலம் செயல் படும் ரமணன் அதன் நிகழ்வுகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற முன்னின்றவர் .ஒன்றியத்தின் மேடைகளிலும் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாடகத்தையும் அந்த ஆல மரத்தடியில் என்ற இலட்சிய நாடகத்தையும் அரங்கேற்றினார்புங்கைய்யூர் எஸ் ரமணன் என்னும் புனைபெயரில் இவரது நாடகங்கள் ஏராளம் ஐரோப்பா எங்கணும் மேடையேறி உள்ளன முக்கியமாக மேட் இன் ஸ்ரீலங்கா .இக்கு அக்கு பச்சை போன்றவை குறிப்பிடத்தக்கன.குறும்பட முழு திரைப்பட தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்பவற்றிலும் உள் நுழைந்த ரமணன் பூப்பெய்தும் காலம் என்னும் சிறந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் .இன்னும் தமிழக திரைப்படமான அஜித்தின் அசல் என்ற படத்திலும் நடித்துள்ளார் .பல நடிகர்களை இவர் பட்டை தீட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர்.இவரது செவ்விகள் படைப்புகளை ஒலிபரப்பாத ஒளிபரப்பாத எழுதாத தொலக்காட்சிகள் வானொலிகள் ஊடகங்கள் இல்லை எனலாம்
ஆக்கம்-சிவ-சந்திரபாலன்
_________________________________________________________________________________
ஆக்கம்-சிவ-சந்திரபாலன்
_________________________________________________________________________________
இவர் நடித்து அல்லது இயக்கி மேடையேறிய படைப்புகள்
நாடகங்கள்
-------------------
மேட் இன் ஸ்ரீலங்கா
சீர்கேடுகள்
வீட்டில வில்லங்கம்
இக்கு அக்கு பச்சை
வெளிக்கிடடி மீனாட்சி
பெத்தாலும் பெத்தேனடா
நான் ஒரு கரப்பான் பூச்சி
பண்டார வன்னியன்
அம்மையே அப்பா
கடலம்மா
எரிமலை பூக்கள்
வில்லுப்பாட்டு
அந்த ஆல மரத்தடியிலே
அந்த ஆல மரத்தடியிலே
---------------------
புத்திமான் பலமாவான்
சுவிஸ் திரைப்படம்
--------------------------
டாரியோ எம்
மாட்லி இன் லவ்
டெலிட்ராமா
--------------------
வணக்கம்
சுவிஸ் தொலக்காட்சி விவரணப்படம்
-----------------------------------------------------
இன்றைய ஈழம் எஸ் எப் 1 தொலைக்காட்சி
நாட்டுக்கூத்துகள்
வீரன் வில்லியம்ஸ் தெல்
காத்தவராயன்
குறும்படங்கள்
முடிவல்ல
பூப்பெய்தும் காலம்
தமிழக திரைப்படம்
அசல் (நடிகர்)
மன்மதன் அம்பு (தொழில் நுட்பம் )
புங்குடுதீவில் இளம்பெண் பச்சிளம் குழந்தைகளை கிணற்றில் எரிந்து கொலை .அவரது தற்கொலை முயற்சி தோல்வி
புங்குடுதீவில் இந்த இளம்பெண் தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட அவர் மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர்
புங்குடுதீவில் இந்த இளம்பெண் தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட அவர் மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர்
15 பிப்., 2013
சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதரத் தடையைக் கோரும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வலி.வடக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்!- பதற்றம் தொடர்கிறது
வலிகாமம் வடக்கு இராணுவத்தினுடைய உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் சற்று முன்னர் புகுந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குமுதம் அட்டை பட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது கலைஞருடன் குஷ்புவை முடிச்சு போட்டு .முகநூலில் மகிழ்னன் எழுதிய விளக்கம் இது . பெரியார் மணியம்மையை மனம் முடித்தது போல கலைஞர் குஷ்புவை--------?
“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார்.
“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார்.
ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. ”
“என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.”
பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் முடித்தார்? அவர் விருப்பத்தின் பெயரில் முடித்தார், தேவை கருதி முடித்தார். அந்த தேவை என்ன என்பதை மேற்கண்ட பெரியாரின் வரிகளே கூறும். அது வெறும் பாலியல் தேவை என்பதாக புரிந்து கொள்பவன், அன்பு என்பது என்னவென்று அறியாத முட்டாளத்தான் இருக்க முடியும்.
மூத்திர சட்டியை தூக்கி சுமந்து கொண்டு இந்த சமூகத்தின் நன்மை கருதி உழைத்த தந்தை பெரியாரை இன்னும் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்ட மணியம்மையை பெரியார் தம் வாரிசாக அறிவித்துக் கொள்ள அன்று இருந்த ஒரே வாய்ப்பாக கையெழுத்திட்டு திருமணம் என்னும் ஏற்பாட்டை செய்து கொண்டார்.
மேலும், இந்த விசயத்தில் சந்தேக அரிப்பெடுத்து திரிபவர்கள் தயவு கூர்ந்து பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக வந்துள்ள நூலை வாங்கி படியுங்கள்.
இன்று குமுதம் இதழ் வழக்கமான தனது ஊடக தருமத்தை அதாவது சமூகத்தில் நிலவும் ஊடக தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
குஷ்பூவையும் மணியம்மையையும் ஒப்பிட்டு ஒரு அட்டைப்படம். இந்த வக்கிரபுத்தியின் ஊடாக இரண்டு விசயத்தை சாதித்திருக்கிறது ஒன்று மணியம்மையை இழிவுப்படுத்தியிருப்பது, இன்னொன்று குஷ்பூவை இழிவுப்படுத்தியிருப்பது.
மணியம்மை தன்னுடைய இள வயது முதலே இயக்கத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்தவர், தன்னுடைய அடிப்படை சுக துக்கங்களை இழந்து வாழ்ந்தவர். குஷ்பூவை பொறுத்தவரை சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரல்ல. இந்த ஒப்பீட்டை செய்யும் அயோக்கியதனமான எண்ணம் ஒருவேளை இந்துமத கடவுள் படங்கள் பொறித்த சேலை அணிந்தாரென்ற காரணத்திற்காகவும் இருக்கலாம்.
ஆனால், குஷ்பூவிற்கு இப்பொழுதுதான் சமூக அக்கறை வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருப்பினும் அது குறித்து நமக்கு கவலையில்லை. அது தேவையுமில்லாத ஒன்று. அவர் நமக்கு அறியப்பட்டது எல்லாம் ஒரு நடிகை என்ற முறையிலும், சமீப காலங்களில் திமுகவின் பேச்சாளர் என்ற முறையிலும்தான். அந்த எல்லையை தாண்டிய விமர்சனம் என்பது அயோக்கியத்தனமானது.
குஷ்பூ இன்று ட்வீட்டரில், இந்தியாவில் பெண்களுக்கு ஒரு மதிப்பான இடத்தை உருவாக்கி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார், இத்தனை ஆண்டுகால கலை உலக வாழ்க்கையில் அப்படியான பாத்திரங்கள் எதையும் திரை உலகம் அவருக்கு வழங்கியதுமில்லை, அவரும் பெண்ணின் மதிப்பை உறுதிப்படுத்தும் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடிப்பேன் என்று கட்டாயமாக தன் கலை வாழ்க்கையில் ஈடுபடவில்லை.
இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இன்றென்ன அக்கறை? என்ற தொனியில் இந்த கேள்வியை கேட்கவில்லை, இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு, தன்னையும் சுயவிமர்சனம் செய்து கொண்டாலொழிய அவரின் “ இந்தியாவில் பெண்களுக்கான சரியான இடமென்பதை உறுதிப்படுத்தும் போராட்டம்.” நியாயமானதாக இருக்காது. அதோடு, இன்றும், திரை உலகம் பெண்களை சித்தரிக்கும் பாங்கு குறித்தும் அவருக்கு ஏதும் கண்டனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கருணாநிதியோடு குஷ்பூவை ஜோடி சேர்க்கும் குமுதம் பத்திரிக்கைக்கு எதற்கு இந்த ……வேலை? குஷ்பூவை விமர்சிக்கும் அறிவுநாணயமுள்ள பிரச்சினை ஏதுமில்லையா? இதுதானா பிரச்சினை, பாலியல் ரீதியாக பெண்ணை தரம்தாழ்த்தி அவதூறு செய்வதுதான் தொடர்ச்சியாக இந்த சமூகம் கையாண்டு வரும் ஆயுதம். குஷ்பூவே கூறுவது போல அவர் ஒரு தாய், மனைவி.
அவரது சுற்றத்திற்கும், அவருக்கும் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் குறித்து இந்த கழிசடை ஊடகத்திற்குத்தான் அக்கறையில்லையென்றால், இந்த பிரச்சினையில் குளிர்காய, இதோ வாய்ப்பென்று ஜல்லியடிக்க கிளம்பியிருப்பவர்கள், என்ன மசிரு விடுதலையை சாத்தியப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.
முன்னாள் போராளிகளை வணங்கிய ஜனாதிபதி மகன் நாமல் ராஜபக்ஷ MP
சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.38 வயதுடைய சிவஞானசீலன் என்பரே தூக்கிட்டுக் கொண்டவராவார். திருமணமான குறித்த நபர் தனது மனைவி கவிதாவுடன் குடித்துவிட்டு வந்து தினமும் கலகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த சிவஞானசீலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு நகரினுள் தினமும் காலையில் சுமார் 41 ஆயிரம் சிறியரக வாகனங்கள் பிரவேசிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று மற்றும் முன்தினம் காலை முதல் பகல் 12 மணி வரை கொழும்பு நகரினுள் நுழையும் சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
Fri Feb 15 03:30 GMT | 09:00 local 03:30 GMT | 3rd Place Play-off - England Women v New Zealand Women Brabourne Stadium, Mumbai | ||
Fri Feb 15 03:30 GMT | 09:00 local 03:30 GMT | 5th Place Play-off - South Africa Women v Sri Lanka Women Barabati Stadium, Cuttack | ||
Sun Feb 17 09:00 GMT | 14:30 local 09:00 GMT | Final - Australia Women v West Indies Women Brabourne Stadium, Mumbai |
சென்னை கொருக்குப்பேட்டையில் 48 வது அதிமுக வட்டச் செயலர் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
தமிழினப்படுகொலை விவாகாரம்: ஐ.நா சட்டவிதி 99ஐ பயன்படுத்துமாறு ஐ.நா பொதுச்செயலுருக்குரிய மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனு!
ஐ.நா.சபையின் சட்ட விதி 99ஐ பயன்படுத்தி இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையினையொன்றினை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)