உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: பிளாட்டர் இடம்பெற்றார் |
இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார். |
-
1 நவ., 2013
கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இலங்கையில் வெட்டி எரிக்கப்பட்ட இளம் பெண் .. பட்டப்பகலில் கொடூரம்
தன் காதலை ஏற்க்க மறுத்த பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தன்மேல் தீமூட்டிக் கொண்டு அந்த பெண்ணையும் கட்டி அணைத்து இரண்டு பேரும் நெருப்பில் கருகிப் போனார்கள் ........................................
தவிர்க்க முடியாத காரணத்தினால் எந்த இடத்தில் நடந்த சம்பவம் என்பதை எம்மால் வெளியிட முடியாது .
உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா - சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம் |
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. |
வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன்
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படு
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா
ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ
தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்கா
விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்
முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்
அனந்தி சசிதரன் பயணத்தில் மாற்றமில்லை புறப்பட்டார் அமெரிக்கா
இலங்கை தமிழச் சங்கம் மற்றும் பல ஐக்கிய அமெரிக்க தமிழர் அமைப்புக்கள் ஒன்றினைந்து தமிழர் சங்கமம் வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் பலர் பங்கு பற்ரும் நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்குபற்ற அடைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன் நிலையில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என வந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன் திட்டமிடப்பட்ட படி நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழச் சங்கத்தின் தலைவர் உறுதி படுத்தினார்.
31 அக்., 2013
அனந்தி சசிதரனின் அமெரிக்கப் பயணம் இரத்து
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.
கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா
கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று
வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்
கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
30 அக்., 2013
அவசர செய்தி ..காவல் துறையின் அஜாக்கிரதையால் ஒரு மாணவனின் உயிர் போக போகிறது ...
திருச்சி அருகேயுள்ள கிராமத்த சேர்ந்த மணி என்ற ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவர் சென்னையில் நண்பர்களுடன் தங்கி தரமணியில் உள்ள அரசாங்க பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அவர் வீடு வீடாக பால் பாக்கெட் கொடுக்கும் தொழிலை பகுதி நேரமாக செய்து வந்தார் அதற்கு சம்பளமாக கிடைக்கும் 4000 ரூபாயில் தனது படிப்பு செலவுகளை கவனித்து கொண்டு ஊரில் இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்து வருகிறார் ..அவர் நேற்று அதிகாலை பால் பாக்கெட்களை எடுத்து செல்லும்போது உரக்க கலக்கத்தில் அதி வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியதில் ஒரு கால் துண்டாகி விட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் காக்க நண்பர்களின் உதவியால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது முதல் தவணையாக 50 ஆயிரம் செலுத்தபட்டும் இன்று மேலும் இரண்டு லட்சம் கட்டுங்கள் இல்லையேல் சிகிச்சையை நிறுத்துவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது அரசாங்க மருத்துவமனைற்கு கூட்டி கொண்டு செல்கிறோம் என கூறியும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டிவிட்டு அழைத்து செல்லுங்கள் என கூறி வருகின்றனர் ..அவரது பெற்றோர்களோ கல் உடைக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ..மேற் சிகிச்சையும் நிறுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் காவல் துறையும் எந்த உதவியும் செய்யவில்லை ..தமிழக முதல்வரால் மட்டுமே இந்த ஏழை மாணவனின் உயிர் காக்க இயலும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவு ..என்னால் இயன்ற அளவு நிதி [20000] உதவி அளித்து விட்டேன் ..யாராவது முதல்வரின் கவனத்திற்கு செய்தியை எடுத்து சென்று ஏழை மாணவனின் உயிர் காக்க உதவுங்கள் தொடர்பு எண்-7401137366
சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் மெஸ்சி,ரொனால்டோ ,நெய்மார்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் |
சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது. |
பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயாட்சி மூலமான தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும்
இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது; சுரேஷ் பிரேமச்சந்திரன்
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்ச திட்டவட்டம்
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.
29 அக்., 2013
கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா? |
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள் |
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை;என்கிறார் சரா எம்.பி
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
28 அக்., 2013
லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல் -லண்டன் தொடரூந்து சேவைகள் முடக்கம்-மரம் முறிந்து ஆண் .பெண் பலி
லண்டனில் உள்ள மக்கள் வெளியில் போக்குவரத்து செய்ய முன்னர் போக்குவரத்து இணையதளத்தினை பார்வை இட்டு செல்லும் படி கூறபட்டுள்ளது
பிரிட்டனில் புயல் கோரம் 140 விமானங்கள் இரத்து 220.000 மக்கள் மின்சாரம் இன்றி அவதி 146 வெள்ளபேருக்கு அபாயம் போக்குவரத்து தடை photo in
கடந்த இரவு ஒன்பது மணியில் இருந்து பிரிட்டனில் நூற்றி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிவருவதால் இதுவரை பிரிட்டன்
கொழும்பு மாநாட்டிற்கு இந்தியா செல்வதா தமிழ்நாட்டில் விவசாயி தீக்குளிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43) இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.கொழும்பில்
வடக்கு மாகாண சபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று
27 அக்., 2013
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் |
கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். |
26 அக்., 2013
உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.
எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள்
எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...
25 அக்., 2013
மாகாண சபையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரே துறை கூட்டுறவுத் துறையே ;நா.சேனாதிராசா
இலங்கையில் முதலாவது சி.க.கூ சங்கம் யாழ்ப்பாணத்திலேயே அமைக்கப்பட்டது அதன் கிளைகளாகவே ஏனைய சங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாகாண சபைக்கு முழுமையாக பாரங்கொடுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத் துறை மட்டுமே எனவும் வவுனியா
தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளது.இன வெறியின் பாதிப்பையும் அதன் வலியவும் அதிகமாக அனுபவித்த நாடுகள் இந்த ஆப்பிரிக்க நாடுகள்.அதனால்தான் இன அழிப்பு நடத்தப்பட்ட இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று தாங்களே முன் வந்து அறிவித்துள்ளன.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)