ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின்
கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம் இன்று நாறுகின்றது.அண்மையில் கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை தெரிவித்திருந்த நிலையில் பின்னர் வழமையாக கொழும்பு தொலைபேசி உரையாடலையடுத்து பின்வாங்கியிருந்தார்.
காலை கறுப்பு உடைகளுடன் ஜக்கிய மக்கள் சக்தியினர் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினர்.நாடாளுமன்றிலும் குரல் எழுப்பினர்.
இதற்கு போட்டியாக பொதுஜனபெரமுனவினர் நாடாளுமன்றில் சஹ்ரான் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ய நிலைவரம் தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது.
எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தவண்ணமிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.