புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2021

கிரிக்கெட்ஐபிஎல்: ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

www.pungudutivuswiss.com
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.


இதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20-ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150- ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 40 ரன்களும், பொல்லார்டு 35-ரன்களும் விளாசினர்.

இதையடுத்து, 151- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அபாரமான துவக்கம் பெற்றது. பெர்ஸ்டோ 43 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 36- ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. 19.4- ஓவர்கள் தாக்குப்பிடித்த ஐதரபாத் அணி 137- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 13- ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதுவரை 3- போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

ad

ad