புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2021

மும்பை அணியை வீழ்த்தியது லோகேஷ் ராகுல்

www.pungudutivuswiss.com
அரைசதம்மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (3), இஷான் கிஷான் (6) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஜோடி பொறுப்பாக ஆடியது. பேபியன் ஆலன் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ரோகித், ரவி பிஷ்னாய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார்.


latest tamil news



மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது சூர்யகுமார் (33) அவுட்டானார். ஷமி 'வேகத்தில்' ரோகித் (63) 'பெவிலியன்' திரும்பினார். ஹர்திக் பாண்ட்யா (1), குர்னால் பாண்ட்யா (3) நிலைக்கவில்லை. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. போலார்டு (16) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஷமி, பிஷ்னாய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


latest tamil news



சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குர்னால் பாண்ட்யா வீசிய 2வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ராகுல், பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். குர்னால் பந்தில் சிக்சர் விளாசிய அகர்வால், பவுல்ட் பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது ராகுல் சகார் பந்தில் அகர்வால் (25) அவுட்டானார்.பொறுப்பாக ஆடிய ராகுல் அரைசதமடித்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த கிறிஸ் கெய்ல், ஜெயந்த் யாதவ் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். பவுல்ட் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல் வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (60), கெய்ல் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

ad

ad