-
30 ஆக., 2026
| மணல்காட்டில் பற்றியெரியும் சவுக்கம் காடு- ஹெலி மூலம் தீயை அணைக்க முயற்சி! [Saturday 2026-08-29 16:00] |
![]() யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது |
| காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என தமிழரசுக் கட்சி அறிவிப்பு! [Saturday 2026-08-29 16:00] |
![]() வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. |
28 ஆக., 2026
| நேபாளத்தில் காணாமல் போன 644 வெளிநாட்டவரில் இலங்கையர் யாரும் இல்லை! [Thursday 2026-08-27 18:00] |
![]() நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
26 ஆக., 2026
| கெஹெல் பத்தரபத்மேவின் கைபேசியில் 13 சிறை அதிகாரிகளின் இலக்கங்கள்- மொடல் அழகிகள், அரசியல்வாதிகளின் படங்கள். [Wednesday 2026-08-26 09:00] |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோரலகமகே மனுதின பத்மசிரிபேரேரா எனும் கெஹெல் பத்தரபத்மேவின் கைத்தொலைப்பேசியிலிருந்து 13 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களின் தொலைபேசி இலக்கங்களும் மோடல் அழகிகள் உட்பட 7 அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர் |
24 ஆக., 2026
| உக்ரைன் மொத்தமாக துண்டாடப்படும்: கோரிக்கையை நிராகரித்த ஜெலென்ஸ்கி! [Monday 2026-08-24 07:00] |
![]() உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி. ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார். தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார் |
| ஹார்முஸ் நீரிணையில் சேவைக் கட்டணங்களை அறிவித்த ஈரான்! [Monday 2026-08-24 07:00] |
![]() ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைக் கட்டணங்களை ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கப்பல்கள் இனி சேவைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் வரம்பை விவரித்த ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எப்ராஹிம் ரெசாய், இந்தக் கட்டணங்கள் கடல்சார், சுற்றுச்சூழல் மற்றும் தளவாடங்கள் சார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவித்தார். |
| பிரித்தானியாவில் சைபர் தாக்குதல்: மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான்! [Sunday 2026-08-23 17:00] |
![]() பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒரு சிறிய மின் நிலையம் மீது ஈரான் ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் காரணமாக அந்த நிலையம் நான்கு நாட்கள் செயலிழந்தது. டெலிகிராப் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இது பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது. |
22 ஆக., 2026
அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!
| கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை மரணம்! [Saturday 2026-08-22 10:00] |
![]() கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார். |
| செல்வச்சந்நிதியில் வெற்றிலை மென்ற 5 பேருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்! [Saturday 2026-08-22 10:00] |
![]() தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
| சோமரத்ன ராஜபக்ஷ காட்டும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும்! [Saturday 2026-08-22 10:00] |
![]() செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார். |
| அதிக செறிவுள்ள செயற்கை ஒளியினாலேயே 400 பேருக்கு கண்பாதிப்பு! [Saturday 2026-08-22 10:00] |
![]() யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். |
| மன்னிப்புக் கோரி விட்டு நாடாளுமன்றில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா! [Saturday 2026-08-22 10:00] |
![]() பாராளுமன்றத்தில் இருந்து விடைபெறுகின்றேன். இதுவே எனது இறுதி உரை. இவ்வளவு காலம் யாருடைய மனமும் வருந்தும் வகையில் நான் நடந்துகொண்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். சென்று வருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். |
21 ஆக., 2026
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தி.மு.க
| ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்கு இலக்கான உக்ரைன்! [Friday 2026-08-21 07:00] |
![]() உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய உக்கிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து அந்நகரம் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவு வாக்கில் தொடங்கி மதியம் வரை நீடித்த தாக்குதலில், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் குழந்தைகள் மருத்துவ மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. |
| விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளம் காண ஜனாதிபதி உத்தரவு! [Friday 2026-08-21 11:00] |
![]() கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். |














