திங்கள், ஜூலை 01, 2019

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு பயாகல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை அங்கத்துவப்படுத்தும் நான்கு உறுப்பினர்களும், ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களும் அதில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெயர் விபரங்களை உலக கிண்ண கிரிக்கட் போட்டி நிறைவடைந்த பின்னர் வெளியிடுவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளா