புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2022

புலிகளை வெற்றி கொள்ள உதவிய பாகிஸ்தான் கிரனைட் லோஞ்சர்கள்!

www.pungudutivuswiss.com


 தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டோன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டோன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை. அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன.

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு உதவின என தெரிவித்துள்ளார்.

எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார். டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad