-
1 அக்., 2026
| RAF ஃபேர்ஃபோர்ட் விவகாரம்: ஈரான் தொடர்பில் வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம்! [Thursday 2026-10-01 07:00] |
![]() ஈரான் இதில் பங்கு வகித்ததற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக ஆன்டி பர்னாம். குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈரானுக்குப் பங்கு இருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம் கூறியுள்ளார். சமீப மாதங்களில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தி வரும் RAF ஃபேர்ஃபோர்டு தளத்திற்கு அருகே நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். |
| ஜேர்மனியில் வேலையை காட்டத் துவங்கியது AfD கட்சி! [Wednesday 2026-09-30 16:00] |
![]() ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை |
| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு! [Thursday 2026-10-01 06:00] |
![]() இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். |
| சமளங்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாட்டுக்கு திட்டம்! [Thursday 2026-10-01 06:00] |
![]() வவுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |



