-

17 ஆக., 2026

www.pungudutivuswiss.com
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
[Monday 2026-08-17 07:00]

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்படி, நேற்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் வடக்கு வாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் பக்திபூர்வமாக நாட்டப்பட்டன.

நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்பதற்காகவும், ஆலயத்தின் வெளி வீதிகள் முழுமையாகத் திருவிழாக் கோலம் பூணுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கொடியேற்ற நாளான இன் முதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

ad

ad