சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு இருந்து என்ன பலன்: கிருஷ்ணசாமி பேச்சு
எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு