கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
டெல்லியில் 7வது முதல்வராக, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடக்க உள்ள பதவி ஏற்பு விழாவில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.
இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள்.
12 காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
புங்குடுதீவு நயினாதீவுக்கு இடையிலான பாதை சேவை வெகுவிரைவில் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது .இதன் மூலம் நயினாதீவு மக்களும் நயினாதீவு செல்லும் பௌத்த இந்து பக்தர்களும் பெரும் நன்மை அடைவர்
திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க., செயலராக ரயில் பாஸ்கர் நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே பகுதியைச் சேர்ந்த முப்பால், மாவட்ட பொறுப்பாளராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
கனவனை கொன்று சிறை சென்று திரும்பி வந்த மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பேரிகை அருகே உள்ள கொம்மர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது-35). இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சீனப்பா மனைவி மஞ்சுளாவிற்கும் “கூடாநட்பு” இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் நெல்லை சிறையில் அடைப்பு திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இளையராஜா உடல்நலம் பெறவேண்டும் : வைரமுத்து விருப்பம்
உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய படம் கங்காரு. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் கங்காரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ஏ.ஆர். ரஹ்மான். பாடலாசிரியர் வைரமுத்து வந்து வாழ்த்துப்பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம்திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’ தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும்
கோத்தபாயவின் செயற்பாடுகளை எதிர்க்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள காணிகளை சுவீகரித்து வருகிறார்.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முரளிதரன் சாதகமான பதில்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஷிராணி பண்டாரநாயக்க
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, 'இயற்கை வளங்களை பாதுகாத்து அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம்' என்று உறுதியேற்போம். இதுவே மாண்ட உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என வடமாகாண விவசாய,
குஜராத் கலவரம்! நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! அஹமதாபாத் நீதிமன்றம் உத்தரவு!
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரியின் என்பரின் மனுவை தள்ளுபடி செய்து அஹமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது குல்பார்க் சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட