புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2014

ஏழாயிரத்தினை நெருங்கும் எபோலா பலி எண்ணிக்கை கடந்த வாரம் மட்டும் 1000 பேர் மரணம்
உயிர்க்கொல்லி வைரஸ் நோயான எபோலாவுக்கு உலகளாவிய ரீதி யில் இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயி ரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபி ரிக்க  நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலிலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது.

இவை தவிர நைஜீ ரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் பரவியுள்ளது.

இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே எபோலா நோய் பரவாமல் தடுக்க சர்வதேச நாடுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

எபோலா நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 6ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்குள் இந்த நோய் தாக்கி ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். தற்போது லைபீரியாவில் தான் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இங்கு நோய் தாக்கிய 7ஆயிரத்து 244 பேரில் 4ஆயி ரத்து 181 பேர் இறந்துள் ளனர். சியாராலிலோனில் பாதிக்கப்பட்ட 6ஆயிரத்து 802 பேரில் ஆயிரத்து463 பேரும், கினியாவில் 2ஆயிரத்து123 பேரில் ஆயிரத்து 284 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தற்போது எபோலா நோய் தாக்கம் சியாராலிலோன் நாட்டில் அதிகம் உள்ளது. அதே நேரத்தில் லைபீரியாவில் குறைந்துள்ளது.

கினியா, சியாராலிலோன் நாடுகளில் மட்டும் 16 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாலி நாட்டில் எபோலா தாக்கி 10 பேர் பாதித்து இருந்தனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா மற்றும் செனே கல் ஆகிய நாடுகளில் எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட்டது.

தற்போது அங்கு எபோலா நோய் பாதிக்கப்பட்டவர்களும் இல்லை. உயிரிழப்பும் இல்லை.

இந்த தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அறி விக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

ad

ad