புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2021

அடுத்த வாரம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

www.pungudutivuswiss.com
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இம்முறை இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்.

இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad