| காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மரணம்! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உள்ளிட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. |
