16 தமிழ் அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது மத்திய அரசு தடை என தகவல்! கலைஞர் கண்டனம்!
"குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறித்ததாக" கூறுவார்களே, அது போல இலங்கை ராஜபக்ஷே அரசு தமிழர்கள் என்றால் ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்களோ; தெரியவில்லை!
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில்