-

16 அக்., 2025

இஷாரா செவ்வந்தியுடன் சிக்கிய மிருசுவில் தக்சி நந்தகுமார், பளை சுரேஸ் போன்றோரின் பின்னணி என்ன?

www.pungudutivuswiss.com





அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (வயது 26),
கிளிநொச்சி- பளையைச் சேர்ந்த ஜீவதாசன் கனகராசா சுரேஸ் (வயது 33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (வயது 23)
தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (வயது 49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (வயது35) மற்றும்
தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநனர் ASP ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் IP கிஹான் டி சில்வா ஆகியோரால் மூன்று நாட்களாக நேபாளத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. நேபாள காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன், காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ், கடந்த சனிக்கிழமை (11) முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தின் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ரொஹான் ஒலுகலவின் தலைமையில் இந்த சோதனை திட்டமிடப்பட்டது. அதன்படி, காத்மாண்டு சென்ற இலங்கை காவல்துறை அதிகாரிகள், நேபாள காவல்துறையினரை சந்தித்து நடவடிக்கை குறித்து விவாதித்தனர், மேலும் இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த சொகுசு வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்கிய பின்னர், விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நடவடிக்கையைத் தொடங்கிய நேபாள பொலிசார், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான கென்னடி பஸ்தியான்பிள்ளை அல்லது ‘ஜே.கே. பாய்’ என்பவரைக் கைது செய்தனர். அவர் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது இஷாராவின் இருப்பிடத்தை உறுதிசெய்த பிறகு, நேபாள காவல்துறையின் உதவியுடன் வீடு சோதனை செய்யப்பட்டு, செவ்வந்தி கைது செய்யப்பட்டார். தன்னைக் கைது செய்ய வந்த உதவி காவல் கண்காணிப்பாளரைப் பார்த்தவுடன் திகைத்துப் போன சந்தேக நபர், “ஓலுகல சேர் எனக்குத் தெரியும் நீங்கள் என்னைக் கைது செய்வீர்கள் என்று" இவ்வாறு கூறியுள்ளார்
செவ்வந்தி, பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு இந்திய பெண் என்று கூறி வந்ததாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். “அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் தனது அறைக்குள் தங்கியிருந்ததாகவும் கூறினார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். “ஆபத்தை குறைக்க அவர் வெளியே செல்வதைத் தவிர்த்திருக்கலாம்.”
ஒலுகல எப்போதாவது வந்து தன்னைக் கைது செய்வார் என்று நினைத்ததாக இஷாரா செவ்வந்தி கூறினார். ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கியிருப்பதாகவும், இப்படி இருப்பதை விட இலங்கைக்குச் செல்லலாம் என நினைத்ததாகவும், ஆனால் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் தான் நேபாளத்திலேயே இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
ஜீவதாசன் கனகராசா மற்றும் தக்சி நந்தகுமார் ஆகியோர் மித்ராபார்க், புதிய பேருந்து நிறுத்தம் அருகே கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளில் ஜே.கே. பாய், இஷாரா செவ்வந்தியை படகில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அங்கேயே வைத்திருந்தார், பின்னர் ஆறு நாள் ரயில் பயணத்தின் மூலம் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றார். கடல் வழியாக குற்றவாளிகளை மற்ற நாடுகளுக்கு கடத்துவதை தனது தொழிலாகக் கொண்ட ஜே.கே. பாய், தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எல்லை தாண்டி நேபாளத்திற்கு கொண்டு வந்தார், மேலும் காத்மாண்டுவில் ஒரு வாடகை வீட்டையும் அவருக்கு வழங்கினார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு பல நாட்களாக கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, பின்னர் மதுகம பகுதிக்கும், அங்கிருந்து மித்தேனியாவிற்கும் தப்பிச் சென்றார். ஜே.கே. பாய் மித்தேனியாவில் அவருடன் சேர்ந்தார், மேலும் அங்கு ஒளிந்து கொள்ள சம்பத் மனம்பேரி என்ற குற்றவாளியின் உதவி அவருக்கு கிடைத்ததா என்ற சந்தேகத்தை போலீசார் எழுப்பியுள்ளனர்
இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஒரு பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காத்மாண்டுவில் வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு, கெஹல்பத்தர பத்மே கும்பலின் தலைவரான ‘கம்பாஹா பாபா’, அவரை காவலில் இருந்து விடுவிக்க ASP ரொஹான் ஒலுகலவுக்கு ரூ. 5 மில்லியன் லஞ்சம் கொடுக்க முயன்றார், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் இஷாரா செவ்வந்தியை மிகவும் ஒத்த தோற்றமுடையவர்.
இந்த தமிழ்ப் பெண்ணின் தரவு மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இஷாரா செவ்வந்தியின் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் அவளை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில், ஜே.கே. பாய் இந்தத் திட்டத்தை செயற்படுத்தினார். ஆனால், பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது அந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
கெஹல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் பெப்ரவரி 19 அன்று அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் கொமாண்டோ வீரரும் பத்மேவின் கும்பலின் துப்பாக்கிச்சூட்டாளராகக் கருதப்படும் கொமாண்டோ சாலிந்து, சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்ற அறைக்குள் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.
இந்தக் கொலையின் உள்ளூர் செயற்பாட்டாளராக செவ்வந்தி செயல்பட்டார், மேலும் அவர் ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்தக் கொலைத் திட்டம் பல வாரங்களாக கொமாண்டோ சாலிந்துவுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல மன்னாருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொமாண்டோ சாலிந்த, புத்தளம் பாலாவிப் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் இஷாரா செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை.
சஞ்சீவ கொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கணேமுல்ல சஞ்சீவ அத்தனகல்ல மற்றும் கம்பஹா நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டபோது, ​​இஷாரா செவ்வந்தி பல முறை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் கைதானவர்கள் தற்போது இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

15 அக்., 2025

www.pungudutivuswiss.com
எகிப்தின்_கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

கரூர் துயரம் | சட்டப்பேரவையில் கடும் அமளி.. யார் என்ன பேசினார்கள்? நடந்தது என்ன? முழு விவரம்!

www.pungudutivuswiss.com
கரூர் துயரச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் நடந்தது என்ன, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து கட்சி

சுவிஸ் மக்கள் சொக்லேட் முதலான வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் காட்ட முக்கிய காரணம், விலைதான்!

www.pungudutivuswiss.comசெய்யப்படும் வெளிநாட்டு சொக்லேட்கள் மீது ஆர்வம் கட்டுவதாக செய்திகள் கூறுகின்றன.

மனுஷ நாணயக்கார கைது

www.pungudutivuswiss.comநேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு

மனுஷ நாணயக்கார கைது

www.pungudutivuswiss.comமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சாலையில் நெருப்பு கோளமான பேருந்து: பலர் உடல் கருகி மரணம்! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்

எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!

பதறவைக்கும் எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா

தெற்கு பாதாள கும்பலின் புகலிடம் யாழ்ப்பாணமா?

www.pungudutivuswiss.com

கொள்கலன் விடுவிப்புக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார்

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு - இரண்டாவது நாளாக போராட்டம்! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com

இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக 30 கோடி ரூபா மோசடி செய்தவர் கைது! [Wednesday 2025-10-15 07:00]

www.pungudutivuswiss.com


வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

14 அக்., 2025

16 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2025-10-14 16:00]

www.pungudutivuswiss.com

தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.  இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது

நாளை முதல் வெளிநாட்டவர்கள் மின்னணு பயண அங்கீகாரம் பெறுவது முக்கியம்! [Tuesday 2025-10-14 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

நேபாளத்தில் சிக்கினார் செவ்வந்தி!- யாழ். தம்பதியும் கைது! [Tuesday 2025-10-14 16:00]

www.pungudutivuswiss.com


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் ETA புதிய விதிமுறை

www.pungudutivuswiss.com

இலங்கை அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, 2025 அக்டோபர் 15ஆம் திகதி முதல் நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் பயணத்திற்கு முன் இலத்திரனியல் பயண அனுமதி “Electronic Travel Authorisation (ETA)” அனுமதி பெறுவது கட்டாயம்.

இது நாட்டின் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும், நுழைவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வகை செய்யப்படுவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறியதாவது, முன்கூட்டியே ETA விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு புள்ளிகளில் நேரம் வீணாகாமல், பயணிகளுக்கான நுழைவு சீராக நடைபெறும்.

பயணிகளும் வணிக நோக்கில் வருபவர்களும் தங்கள் ETA விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் www.eta.gov.lk மூலம் விமானத்தில் ஏறும் முன்பே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தியா வெளிநாட்டு குடிமக்களுக்காக 2025 அக்டோபர் 1ஆம் திகதி முதல் “Digital Arrival Card” என்ற புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறைப்படி, வெளிநாட்டு பயணிகள் தங்களின் வருகை விவரங்களை (Disembarkation Card) வருகைக்கு முன் 72 மணிநேரத்திற்குள் ஆன்லைனில் பூர்த்தி செய்யவோ அல்லது நாட்டிற்கு வந்த பிறகு கையால் நிரப்பவோ முடியும்.

டிஜிட்டல் விண்ணப்பம் பின்வரும் வழிகளின் மூலம் செய்யலாம்:

  • இந்திய விசா அதிகாரப்பூர்வ இணையதளம்
  • Indian Visa Su-Swagatam மொபைல் செயலி
  • விமான நிறுவனங்கள் வழங்கும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது

இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, காகித வடிவப் படிவங்கள் இன்னும் ஆறு மாதங்கள் வரை கிடைக்கும், அதன் பிறகு முழுமையாக டிஜிட்டல் முறைமைக்கு மாறப்படும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தி, டிஜிட்டல் குடிவரவு முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.


இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மடக்கிப் பிடிப்பு!

www.pungudutivuswiss.comநீண்ட நாட்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மடக்கிப் பிடிப்பு!


திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேபாளத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் ஆகியோர் நேபாளப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘அஜித்குமார் ரேஸிங்’ சாதனை: அஜித்தை காண ரசிகர்கள் குவிந்தனர்!

www.pungudutivuswiss.com
‘அஜித்குமார் ரேஸிங்’ சாதனை: அஜித்தை காண ரசிகர்கள் குவிந்தனர்!

ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கு

காகிதத்தில் வீடு கட்டிக் கொடுத்த அரசாங்கம்! [Tuesday 2025-10-14 07:00]

www.pungudutivuswiss.com


வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா  நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

13 அக்., 2025

www.pungudutivuswiss.comp
 புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மகாசபை கூட்ட செய்தி அலசல் 
கடந்த 12 ஆம்  திகதி நடைபெற்ற ஆலய மகாசபை கூடடம்   பிரதேச சபை செயலாளரின் மேல் பார்வையில் தான்  நிகழ்வுற்றது .வரவு செலவு அறிக்கை சரி பார்க்கப்படட போது சபையோரின் கெலவுகளும் விமர்சனங்களும் பிரதேச சபை செயலாளரின் கவனத்தை ஈர்த்த போது  வரவு செலவு அறிக்கை  உண்மையானதாக   விவரமானதாக காணப்படவில்லை என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது . இதனால்  45 நாட்களில் மீண்டும் வரவு செலவு அறிக்கை  திருத்தி சமர்ப்பிக்கடவேண்டும் அதன் பின்னர் மீண்டும்  தம்மால்  அறிவிக்கட்டும் திகதியில் கூடடம் நடைபெறும்  என சொல்லப்பட்ட்து .இந்த நடைமுறை செயல்படுத்தப்படாத பட்ஷத்தில் பிரதேச சபை தலையிடும் அடுத்து வரும் நிர்வாகங்களில்  இந்த நிர்வாகத்தினர் தெரிவாக முடியாதபடி  இருக்கும் 
www.pungudutivuswiss.comவிஜய் கூட்டணிக்கு வேண்டாம்.. கரூர் விவகாரத்தை சமாளிக்க முடியாமல் ஓடட்டும்.. அப்ப தான் தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக

கோட்டாபயவுக்கு சொந்தமான வீடு அரசினால் பறிமுதல்

www.pungudutivuswiss.com

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல்

www.pungudutivuswiss.com

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல் | Ex Pm Justin Trudeau Pop Singer Katy Viral Pics

   கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரை நிர்வாண கோலத்தில் பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் நெருக்கமாக

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

www.pungudutivuswiss.com

'யாருமே யூகிக்க முடியாத கூட்டணி ஒன்று உருவாகும்' - டி.டி.வி தினகரன்! [Monday 2025-10-13 07:00]

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் சீமான் அவர் எப்பொழுதும் தனியாகத்தான் போட்டியிடுவார். இந்த முறையும் தனியாகத்தான் போட்டியிடுவேன் என அறிவித்து விட்டார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு

ad

ad