போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்
சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

