புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2015

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு


பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது.
அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் பிரெஞ்சு போர்விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் 6 முக்கிய நிலைகளின் மீது 60-க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இவைகளில் பெரும்பாலானவை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கமாண்ட் சென்டர் மற்றும் பயிற்சிக் களங்களாகும்.
இதுவரை அங்கு 35-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாத நிலைகளை தவிடுபொடியாக்கி இருப்பதாக பிரான்ஸ் ராணுவ செய்தித்தொடர்பாளர் கெலனல்.கில்லிஸ் ஜாரோன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பிரான்ஸின் விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ஆணு ஆயுத விமானங்களை தாங்கும் சார்லஸ் டி கவுலே போர்க்கப்பல் கிழக்கு மெடிடீரனீன் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

ad

ad