புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2015

ஒரு சுவையான செய்தி தரவேற்றம்என்ன தவறு  என்று  நீங்களே கண்டு பிடியுங்கள்
என்னவோ சொல்லுவாங்க தனக்கறியா ..........
தன் பிடரிக் கு சேதமோ

ஊடகத்துறை இணைய தரேவ்ற்றம் அல்லது  செய்தி பதிவு என்பது வெறுமனே மொழிபெயர்ப்போ அன்றி பிரதி பண்ண லோ  அல்ல எந்த ஒரு துறையிலும் அந்த துறைசார்  அறிவு  விசாலமாக இருந்தாலொழிய இன்றைய நவீன விஞ்ஞான  கருவிகளின் துணையோடு  இதுவெல்லாம் செய்து விடலாம் என்பது மடமைத்தனம் சுத்த வடிகட்டிய முட்டாளின் வேலை  எனது அனுபவத்தில் எந்த துறையில் ஈடுபாடு கொண்டாலும்  பொதுவாக  முதலில் நம் பொது அறிவை  நன்றாக மேம்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் . எங்கோ இருந்து கொண்டு காசுக்காக மொழிபெயர்த்து ஊடகத்துறை   இயக்கினால் சுவிசின்  கூர் என்ற இடத்தை  சூர் என்றும் வோ மாநிலத்தை  வோட் என்றும் பல்கேரியாவின் தலைநகர் லீக்டேன் ஸ்டைன் என்றும் தான் எழுதுவார்கள்(அண்மையில் எம்மூரின் இணையம் ஒன்றில் வந்த செய்தியில் ) அது சரி இப்போ   கீழே உள்ள செய்தி ஒரு  பிரபலமான  ஊடகத்தில் வந்துள்ளது தவறு எங்கே உள்ளது எவ்வளவு மாபெரும் தவறு என்று உங்கள் அறிவுக்கு சவாலாக விட்டு விடுக்ன்றேன் கண்டு பிடியுங்கள் எனக்கும் ஒரு  வரி எழுதுங்கள் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள்: பிரேசில், அர்ஜென்டினா தகுதி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015, 07:31.15 மு.ப GMT ]
2018ம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.
ரஷ்யாவில் 2018ம் ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
தென் அமெரிக்க கண்டங்களுக்கான போட்டியில் பிரேசில்- பெரு அணிகள் மோதின, இதில் பிரேலில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியாவை தோற்கடித்த அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் வென்றது.
இதன்மூலம் பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

ad

ad