புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2021

www.pungudutivuswiss.com
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி - நீண்ட இழுபறிக்கு பின் கமல்ஹாசன் தோல்விஇன்று காலையில் இருந்தே கோவைத்தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் முதலிடத்திலும், மயூரா ஜெயகுமார் இராண்டாம் இடத்திலும், வானதி ஸ்ரீநிவாசன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். மதியத்திற்கு மேல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் வானதி. நீண்ட நேரம் கமல்ஹாசன் முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வானதி சீனிவாசன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.

image



கடந்த சில மணி நேரங்களாக இருவருக்கும் இடையே மிகசிறிய அளவிலான வாக்குவித்தியாசம் நிலவிவந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

முன்னதாக தமிழகசட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் திமுகக் கைப்பற்றி ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது

ad

ad