| ஷிராந்திக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை- பிணையில் விடுவிப்பு! [Friday 2026-10-16 19:00] |
![]() தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிறிலிய சவிய’ கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போடரகமவினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். |
இதயத்துக்கான இரத்த ஓட்டத்தைத் தடை செய்யும் வகையில் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையால், சந்தேகநபருக்கு உடனடியாக கரோனரி தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமுண்டு என கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்துக்கு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய உண்மைகளைக் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை 100,000 ரூபாய் சரீரப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
-
17 அக்., 2026
www.pungudutivuswiss.com
