அதற்கேற்ப, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான செயல் திட்டங்களை பா.ம.க.வினருக்கு வகுத்துக் கொடுத்து அந்தப் பயணத்தை விரைவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் இது குறித்துப் பேசிய ராமதாசு, ""வரும் நாடாளுமன்றத்
-
16 ஏப்., 2013
15 ஏப்., 2013
பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது :
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கை - தமிழ்நாடு முறுகல் உக்கிரம்! அல் ஜசிரா தொலைக்காட்சியின் செய்திப் பெட்டகம்
இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.
14 ஏப்., 2013
13 ஏப்., 2013
சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக்கூட்டம் எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை மது ஒழிப்பு பிரசார நடைப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!-விகடன்
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
12 ஏப்., 2013
ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்
ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா தகவல்
கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு!- மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு த.தே.பொ.க. கோரிக்கை
சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது
இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது . இதில் 4-2 என்ற ரீ தியில் வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும் செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல் (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன
இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது . இதில் 4-2 என்ற ரீ தியில் வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும் செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல் (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சபைபில் சம்மந்தன் காட்டம்
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடிவேலு வீட்டுக் கல்யாணம்! (Photos)
1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,
11 ஏப்., 2013
நான் நன்றாகவே இருக்கிறேன்: சித்ரா தேவி மேலே கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டாம்: சகோதரருக்கு போனில் பேசிய அஞ்சலி
நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை
துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்-பி.பி.சி
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
10 ஏப்., 2013
9 ஏப்., 2013
அண்ணாமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவான்மியூரை அடுத்த சாஸ்திரிநகர் 14-வது குறுக்கு தெருவில் உள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர்.
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட கோவில் ஒன்றின் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கைக்கு வர இருந்தனர்.
’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!
அஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.
2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. pஅதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. பெயர் விபரம் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன
குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு.
8 ஏப்., 2013
வடமாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா |
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார்
|
வீட்டை விட்டு ஓடிவர மறுப்பு! காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.
நடிகர் வடிவேலு மகளுக்கு
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
நடிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர். பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.
தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http:// eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
http://
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
பி.பி.ச
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.
7 ஏப்., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)