சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
-
21 மே, 2013
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
20 மே, 2013
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி |
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். |
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார்.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா.
30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா.
பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.
மருமகளை கற்பழித்த கிழட்டு மாமனார்! கணவனின் டேக் இட் ஈசி பாலிசி
மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
19 மே, 2013
சென்னை அணியால் 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.
மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
18 மே, 2013
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.BBC
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' வரை தொடர்ந்தது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது. இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் திடீர் தடை விதித்தனர். இருந்தாலும், திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலூரில் உள்ள் திருமண மண்டபத்தில் வைத்து 11 மணி முதல் தற்போது வரை இன்டோர் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது போலீஸ்!
முள்ளிவாய்க்காலில் உறவுகளுக்கு அஞ்சலி |
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தலமையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
|
யுத்த வெற்றிவிழாவில் 30 போர்விமானங்கள் 50 யுத்தக்கப்பல்கள், 100 தாக்குதல் வாகனங்கள், காலை 9 மணியளவில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு உரை
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வெற்றிவிழாவில்
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்றுவியாழக்கழமை இரவு
குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்றுவியாழக்கழமை இரவு
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு இருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தனியாக ஒரு கிரிக்கெட் சூதாட்டம் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளதை தமிழ்நாடு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
17 மே, 2013
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.விந்தன் கனகரத்தினம், இலங்கைத்தமிழரசுக்கட்சி யாழ்.மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபன் ஆகியோருடன் யாழ் பல்கலைக் கழக ஒன்றிய செயலாளர் தர்சனாந்த் பரமலிங்கம் இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை அனலைதீவு கிராமத்துக்குச்சென்று நிலைமைகளைப்பார்வையிட்டு, மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்கள் படங்கள்
வவுனியா: தாயின் கோரச் செயலால் மூன்று குழந்தைகளும் பலி; கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்பு!!
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 மே, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)