இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு…! இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா. இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா…? சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ”இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்.. நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்
-
4 நவ., 2013
2 நவ., 2013
மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை/வரலாறு திரும்புகிறது
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆஸி. ஊடகவியலாளர்களின் கணணித் தரவுகள் இலங்கை அதிகாரிகளால் அழிப்பு
இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச ஊடக மையப் பணிப்பாளர் ஜெக்லின் பாக் மற்றும் ஜீன் வோர்திங்டன் ஆகியோரின் கணணிகளின் முழுமை தரவுகளும் இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்படடுள்ளன.
வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் எழுகை அமைப்பின் இரண்டாவது ஆண்டுவிழா
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணியில் பங்கெடுக்கும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் செயற்படும் ஆன்மீக, கலை, பண்பாட்டு, சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட எழுகை நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டுவிழா
தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தை உடைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக! ஜனாதிபதிக்கு யோகேஸ்வரன் எம்.பி. மகஜர்
தம்புள்ள தமிழ் மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை இடித்தவர்களை அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்!- சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் வாதத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ்நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் காணி உரிமையாளர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
1 நவ., 2013
இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)