www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

ஞாயிறு, ஜூன் 02, 2019

ஒவ்வொரு அணிகளும் எத்தனை வெற்றிகள் பெறும்? ஆரூடம் சொல்கிறார், பிரன்டன் மெக்கல்ல

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை டைரியில் எழுதி அதை ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.
லண்டன்,
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை டைரியில் எழுதி அதை ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அணி 9 லீக் ஆட்டங்களில் 8–ல் வெற்றி பெறும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கும் என்று ஆரூடம் சொல்லி உள்ளார். இந்திய அணியும் 8 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறிக்கும், இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை தழுவும் என்பது அவரது கணிப்பாகும்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 6–ல் வெற்றியை வசப்படுத்தும். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடம் ‘சரண்’ அடையும் என்று குறிப்பிட்டுள்ள பிரன்டன் மெக்கல்லம், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சிக்கலின்றி அரைஇறுதியை எட்டும், என்கிறார்.
அரைஇறுதிக்கான மற்றொரு இடத்திற்கு 4 அணிகள் முட்டிமோதும். அதாவது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றி, 4 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது பார்வையில் வங்காளதேசம் (இலங்கைக்கு எதிராக), இலங்கை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) அணிகளுக்கு தலா ஒரு வெற்றி மட்டும் கிடைக்கும், ஆப்கானிஸ்தான் 2 வெற்றி (இலங்கை, வங்காளதேசத்துக்கு எதிராக) பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.