-

10 அக்., 2026

www.pungudutivuswiss.com
'கருப்பு ஜூலை' குறித்து விசாரணைக் குழு நியமிக்க கோரி தனிநபர் பிரேரணை!
[Saturday 2026-10-10 08:00]


1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கருப்பு ஜூலை' இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய மனிதப் படுகொலைகள் குறித்து முழுமையான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கருப்பு ஜூலை' இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய மனிதப் படுகொலைகள் குறித்து முழுமையான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) குறித்த தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், இச்சம்பவங்கள் தொடர்பில் உரிய சட்ட மற்றும் விசாரணட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தினார்.

1983 ‘கருப்பு ஜூலை’ மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், இன மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவை நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவங்கள் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் தீயிட்டு முழுமையாக அழிக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், இந்த வன்முறைச் சம்பவங்களை வழிநடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை; மனித உரிமை மீறல்கள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து பரந்துபட்டதும் சுயாதீனமானதுமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, இவ்வாறான இன மோதல்களும் வன்முறைகளும் இனியும் இந்த நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவும், நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும் எனப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad