மூன்று தமிழர்க்கும் எப்போது உத்தரவு?- நக்கீரன்
-
25 ஜன., 2014
போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,
கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நிரந்தரமான நீக்கம் இருக்குமா? மு.க.அழகிரி நீக்கம் குறித்து துரைமுருகன் பதில்!
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன்,
பருத்தித்துறையில் தரம் 8 பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பண்ணைக் கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
வடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (வயது 13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
24 ஜன., 2014
கோத்தபாய வாயை மூடாவிட்டால் அரசுக்கு ஆபத்து!- லலித் வீரதுங்க ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாயை அடக்குமாறும் இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆபத்து என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மனித புதைகுழியை பார்வையிடச் சென்ற செல்வம் எம்.பி. திருப்பி அனுப்பப்பட்டார்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று இடம்பெற்ற போது அவ்விடத்தை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்: க.அன்பழகன் பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய க.அன்பழகன், கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்ற, யாரும் குறைக்காமல் தடுக்க, முறைப்படுத்த தலைமை கழகத்தினுடைய எண்ணமாக இந்த அறிக்கை வெளிவருகிறது என்றார்.
சுவிஸ் பாசல் விளையாட்டு வீரர் சலா செல்சீக்கு மாறுகிறார்
எகிப்து நாட்டு 21 வயதேயான இளம்வீரர் மொகமத் சலா உடனடியாகவே எப் சீ செல்சீ கழகத்துக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் கடந்த ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் பலம் மிக்க செல்சீக்கு எதிராக 3 கோல்களை அடித்து இரண்டு தடவையும் பாசல் கழகம் வெல்வதற்கு காரணமாக இருந்த சலா இனை 16.5 மில்லியன் பிராங் மூலம் மாற்றி உள்ளார்கள் செல்சீ கழகத்தினர் .
எகிப்து நாட்டு 21 வயதேயான இளம்வீரர் மொகமத் சலா உடனடியாகவே எப் சீ செல்சீ கழகத்துக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் கடந்த ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் பலம் மிக்க செல்சீக்கு எதிராக 3 கோல்களை அடித்து இரண்டு தடவையும் பாசல் கழகம் வெல்வதற்கு காரணமாக இருந்த சலா இனை 16.5 மில்லியன் பிராங் மூலம் மாற்றி உள்ளார்கள் செல்சீ கழகத்தினர் .
யுத்த காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: மட்டக்களப்பில் கோத்தபாய தெரிவிப்பு
யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குழுக்களுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தோம். அதன் பின்னர் வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றதன் காரணமாக எங்களால் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநாடு திருப்பு முனையாக அமையும். தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதால், சிவாஜி சிலை அகற்றப்படுகிறது. சிலை அகற்றப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வர். தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவது தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என கூறினா
மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 44 எலும்புக் கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்றும் ஒரு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார் நீதவான் ஆனந்தி
நிபந்தனைகளுடன் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை
23 ஜன., 2014
அரையிறுதியில் நடால், பெடரர் அண்மைக் காலங்களில் அரை இறுதி இறுதி என முன்னேறும் பெடெரெர் நாடல் அல்லது ட்ஜொகொவிச் இடம் தோற்றுப் போவது கூடுதலாக நடைபெறுகிறது |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னி
|
புதன்கிழமை ரொறன்ரோப் பெரும்பாகத்தில் பலத்த குளிர்நிலவுகின்றதன் விழைவாக ரொறன்ரோ விமான நிலையம் திரும்பவும் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது.
குறிப்பாக இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானமாயினும், தரையிறங்கும் விமானமாயினும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. எனத் தெரியவருகிறது.
மேலும் செவ்வாயக்கிழமை அமெரிக்காவில் நிலவிய பனிப்புயல்
பாராளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து நெல்லை, தூத்துக்குடிக்கு ராஜ்யசபா பதவி! அதிமுகவினர் கருத்து!
சிவாஜி சிலையை இடம் மாற்றலாம்! தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யுமாறு தியாகி சீனிவாசன் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு அளித்திருந்தனர்.
சிலை இருக்கும் இடத்தை மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்! புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
பிரிட்டனிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களையும், அந்நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின்
இப்படித்தானே வாழமுடியும்? - இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி-விகடன்
ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த
மன்னார் புதைகுழியில் இன்றும் 3 எலும்புக் கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்று மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவே ஐநாவில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்கட்டும்!- நாடு கடந்த தமிழீழ எம்.பி.வேண்டுகோள்-விகடன்
இலங்கை அரசு வேண்டுமானால், பிரச்சினை முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது, தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று வெற்றுச் சொற்களால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ராஜபக்ஷே அரசு, தமிழர்களுக்கு விஷத்தைத் தடவி மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது.
என் மகன் விடுதலை ஆவான்!
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உறுதி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு 2000ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்தார்.
இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது.
நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
22 ஜன., 2014
விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் - பொ.ஐங்கரநேசன்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை
இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் மலேசிய பினாங் முதலமைச்சர் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்
மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சர் பி. இராமசாமி, பிரித்தானிய தமிழர் பேரவை இந்த மாத இறுதியில் நடத்தும் மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்காக பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.இந்த மாநாட்டின் போது தாம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை
21 ஜன., 2014
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று தோண்டப்பட்டது! மேலும் மனித எச்சங்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.9 வது தடவையாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்
ராஜபக்ச கூறுவது பொய்: வடக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர்!- ஆங்கில இணையத்தளம்
வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக பொய்யுரைத்துள்ளதாகவும், வடக்கில் 16 முதல் 19 வரையான படைப் பிரிவுகள் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
20 ஜன., 2014
வீரபாண்டி ராஜா கடிதம்! சேலம் தி.மு.க வில் திடீர் பரபரப்பு!
மறைந்த வீரபாண்டியார் உருவச்சிலை வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி அன்று சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகம் முன் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)
19 ஜன., 2014
18 ஜன., 2014
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மலபார் ஹில்ஸ் ரெஸிடன்ஸ் பகுதியில் நடைபெற்றது. சஃபி மஹால் பகுதியில் இன்று அதிகாலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் நெருக்கித் தள்ளியில் 18 பேர் பலியாகினர். காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது
இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் கிளினிக்கில், குல்லூர் சந்தையில் உள்
போர்க்குற்ற ஆதாரங்கள் முற்றிலும் உண்மையே; முடியுமானால் அவற்றைப் பொய் என்று நிரூபியுங்கள் சிங்களக் கடும்போக்கு அமைப்புகளுக்கு மன்னார் ஆயர் சவால்

அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்து
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் 7 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் கடந்த இரண்டு தடவைகளாக பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிராக வாக்களித்திருந்தனர்.
வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக மரியான்பட பாடல்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படும் வாய்ப்பு?
2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம்
அரசின் இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவா பொறிக்குள் தப்புமா? |
இலங்கை அரசு ஜெனி வாவில் 25ஆவது மனித உரிமைகள் மாநாட்டை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறது. தனக்கெதிராக மார்ச்சில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் பிரேரணையை |
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில் மரணம்
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த பிருதிவிராஜ் அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு
ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை; இந்திய துணைத்தூதுவர்
வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும்
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது நிச்சயம்
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது.அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி
அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)