புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளரான கென்கிருபா அவர்களின் தேர்தல் நிதி சேகரிக்கும் நிகழ்வு!

கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபா ஸ்காபரோ கில்ட் வூட்(Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளராக புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சி (PC) சார்பில் வேட்பாளராக தெரிவானமை யாவரும் அறிந்ததே.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண ஆட்சிமன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தேர்தல் நிதிக்காக கென் கிருபா அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் தேர்தல் நிதி சேகரிப்பு நடவடிக்கையினை
 தொடர்ந்து வருகின்றார்.
அந்த வகையில் வருகின்ற ஜூன் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் Scarborough Convention Center இல் தேர்தல் நிதி சேகரிக்கும் (Fundraiser Dinner) நிகழ்வு இடம்பெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இரவு விருந்து வைபவமும் இடம்பெற இருக்கின்றது.
இந்த நிகழ்வில் பொது மக்கள், ஆதரவாளர்கள், வர்த்தகப் பெருமக்கள் அனைவரையும் திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு கென் கிருபா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Please message me or call me to purchase the tickets or send me an email: ken@kenkirupa.ca
kenkiruba_banner
kenkiruba

ad

ad