-

22 அக்., 2026

சவூதி தம்மாம் விமான நிலையம் மீது அதிரடி தாக்குதல்! அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்

www.pungudutivuswiss.com

சவூதி தம்மாம் விமான நிலையம் மீது அதிரடி தாக்குதல்! அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள் | Attack On Dammam Airport Saudi Civil Aviation 

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 22) அதிகாலை இதனை அறிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்

நேற்றிரவு (21) நடந்த இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் சில பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேலும் கூறியுள்ளது.

இதனை் காரணமாக விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளதாக, உலகளாவிய விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் சேவையான Flightradar24 தெரிவித்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், கிழக்கு பிராந்தியத்தில் நான்கு ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்ததாக சவூதி கூட்டணி அறிவித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினரும் வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad