-

2 நவ., 2026

www.pungudutivuswiss.com
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளராக, இசக்கி சுப்பையா போட்டியிடுவதாக கூறி, கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில், அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வான இசக்கி சுப்பையா, ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அவர், தற்போது த.வெ.க.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஜெபமலையில், கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஜெபக்கூட்டம் நேற்று நடந்தது. த.வெ.க., தென்காசி தெற்கு மாவட்ட செயலர் விபின் சக்கரவர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய லாசரஸ், தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாக கூறி, ஓட்டு சேகரித்தார். பின், தவறை திருத்திக் கொண்டு, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாக கூறினார். மேலும், இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளராக போட்டியிடும், இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறு கூறினார்.

இடைத்தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், த.வெ.க., சார்பில் வேட்பாளரை, அக்கட்சி தலைமை அறிவிக்காத நிலையில், ஜெபக்கூட்டத்தில், த.வெ.க., வேட்பாளரை, கிறிஸ்துவ மத போதகர் அறிமுகம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad