-

8 நவ., 2026

www.pungudutivuswiss.com
ஸ்ரான்லி வீதி தனியார் ஆதனம்: 18 மாதங்களுக்குள் வெளியேறுவதாக நீதிமன்றில் டக்ளஸ் உறுதி
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தனியார் ஆதனத்தை விட்டு 18 மாத காலத்திற்குள் தான் வெளியேறுவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆதன உரிமையாளர்களிடம் நீதிமன்றில் உறுதி அளித்துள்ளார்.
ஸ்ரீதர் திரையரங்குக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் , உள்ள தமது கடைகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடாத்தாக கையகப்படுத்தி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பயன்பாட்டில் வைத்துள்ள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது ஆதனத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வந்த போது , கடந்த 2015ஆம் ஆண்டு அவற்றை எம்மிடம் மீள கையளிப்பதாக உறுதி அளித்திருந்தார்
ஆனாலும் 2015ஆம் ஆண்டிற்கு பின்னரும் , தமது ஆதனத்தை மீள கையளிக்கவில்லை என கடைகளின் உரிமையாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்
வழக்கு விசாரணைகளின் போது , டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினராகவும் , அமைச்சராகவும் இருந்த கால பகுதிகளில் , தமது அதிகாரங்களை பயன்படுத்தித்தி தனியார் சொத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆதனம் வழக்காளிகளுக்கே உரித்தானது என்பதனை டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்றுக்கொண்டு , ஆதனத்தில் இருந்து தான் வெளியேற 3 வருட கால அவகாசத்தை மன்றில் கோரினர்.
அதற்கு வழக்காளிகள் தரப்பு சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 18 மாத காலத்திற்குள் வெளியேறுவதாக டக்ளஸ் தேவானந்தா மன்றில் உறுதி அளித்துள்ளார்.

ad

ad