புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2018

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது

ad

ad