புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2019

தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவரை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

அண்மையில் ஒருவரை தாக்கிய சம்பவத்தை முகநூலில் பதிவு செய்தது தொடர்பாக மட்டு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் மீது குற்றம் சுமத்தப்பட்டு பொலிசார் அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மீது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் நீதிமன்ற கட்டளையை மீறி அண்மையில் ஹர்தால் செய்தமை உள்ளிட் வழக்குகழுக்கு நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடிவந்துள்ள அவர் தலைமறைவாகி வந்தார்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் ஆஜராகியபோது நீதவான் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும்

ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு பிரதேசத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த மற்றும் ஹர்தாலின் போது பேருந்து மீது,

கல்வீச்சு நடாத்திய ஏனையவர்கள் தலைமறைவாகியுள்வர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

ad

ad